பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வழி நடத்தல்

(சென்று கனி பறித்துக் கொண்டு எ—மெ)

மரங்கள் அடர்திருக்குங் காடு —கரு
வானில் உயர்ந்த மலை மேடு —தம்மில்
பிரிந்து பிரிந்து செல்லும் வரியாய் —நாம்
பிரியத்துடன் நடப்போம் விரைவாய்ப்
பெருங் குரலில் பாட்டும்
பேச்சும் விளையாட்டும் —நம்மை
விரைவில் அவ்விடம் கொண்டு கூட்டும்!
இளமை தன்னில் வலிமை சேர்ப்போம் — நாம்
எதிலும் தைரியத்தைக் காப்போம், — நாம்
அளவில் லாத நாள் வாழ — உடல்
அழகும் உறுதியு முண்டாக,
ஆசை கொண்டு நடப்போம்
அச்சமதைத் தொலைப்போம் — நம்
நேசர் பலரும் மனங் களிப்போம். (மரங்கள்)

 

ஸ்ரீமகள் அச்சகம், சென்னை-1