பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம். இப்போது ஞானசாகரம் என்னும் செந்தமிழ் மாதம் பத் திரிகையின் ஐந்தாம் பதுமம் நடந்துவருகின்றது. இதுவரை யில் தமிழில் வெளிப்படாத அரிய பெரிய விஷயங்கள் இனிய எளிய செந்தமிழ் நடையில் எழுதப்பட்டு வருகின்றன. இதில் வெளிவரும் விஷயங்களில் சில: மக்கள் நூறு வருஷம் உயிர் வாழ்தல் எப்படி ? மரணத்தின் பின் மனிதர் குமுதவல்லி, மனித வசியம், சிவஞானபோத ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, யோகநித்திரை, ஞானக்கண் திறப்பித்தல் முதலியன. இப்போது கையொப்பஞ் செய்பவர்களுக்கு மூன்று ரூபா; வருஷமுடிவில் இந்து ரூபா. மாதிரிப்பிரதி அனுப்புவ திலலை. வேண்டுவோர் முன்பணம் அனுப்புக , பத்திரிகாசிரி யர்:- பண்டிதர் நாகை வேதாசலம் பிள்ளை, சென்னை.