பக்கம்:முல்லை கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஆனால் அர்ஜுனனின் அழகைப் பற்றி நான் கற்பனை செய்து கொள்ளும் ப்ோதெல்லாம் உள்ளுக்குள்ளே குறுகுறுப்பும் இன்பக் கிளுகிளுப்பும் ஏற்பட்டாலுங்கூட, அப்பாவை முறியடித்துவெற்றிகண்டவன் என்னும்போது என்னை யறியாமல் அவர் மீது குரோத உணர்ச்சிதான் ஏற்படும். அண்ணன் திருஷ்டதும்யுனக்கோ அர்ஜுனன் என்றால் பிடிக்காது. அவனோ எப்போது பார்த்தாலும் துரியேதனனின் பராக்கிரமத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பான் அவனுக்கு ஒரே ஆசை, நான் அத்தினபுரி ராணியாகிவிட வேண்டு மென்று. எனினும் அப்பா சிறுவயசிலிருந்தே விதைத்து வந்த அர்ஜூனனின் எண்ணம் மனசில் உறுத்திக்கொண்டே தானிருந்தது. ஆனால் பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகையில் வெந்து மடிந்தார்கள் என்ற செய்தி எட்டியதும், அப்பாவுக்கு இடி விழுந்தாற்போ லாய் விட்டது. எனக்கோ அர்ஜுனரும் எரிந்து சாம்பலாய்ப் போனார் என்பதைக் கேட்கவே சகிக்க முடியவில்லை. அரக்கு மாளிகை தகனச் செய்தியோடு அர்ஜுனன் மீது எனக்கிருந்த குரோத உணர்ச்சியும் வெந்து மடிந்தது அர்ஜுனனின் மரணம் எனக்கு ஒரு பேய்க் கனவாகப் பட்டது. ஆனால் அந்தச் செய்தி அர்ஜுனர் மறைந்தார் என்ற அழியாத உணர்ச்சி, மனசில் தனிமை'யைச் சிருஷ்டித்துவிட்டது. சுயம்வரம் என்று கேட்டபோது மனசில் மீண்டும் தெம்பு எழுந்தது. பிடிப்பற்று, தாவுவதற்குக் கொம்பற்றுத் தவிக்கும் எனக்கு சுயம்வரம் என்ற சாக்கில் ஒரு பற்றுக்கோடு கிடைத்தால்-என்று தான் நினைத்தேன். சுயம்வர மண்டபத்தில் வந்து நின்றபோது, அதுவும் எனக்கும் மணமகனுக்கும் இடையே வில்லையிட்ட அப்பாவின் கிருத்திருமத்தை நினைக்கும்போது நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/100&oldid=881435" இலிருந்து மீள்விக்கப்பட்டது