101 மனமுடைந்தேன். குந்திதேவியின் அறியா வார்த்தை இது என்று நானும் அப்போது நம்பினேன். ஆனால், இன்று கர்ணனின் ஜென்ம ரகசியம் வெளியான இன்று குந்தி தேவியின் அச்சொல் மிகவும் நிறுத்துச் சொன்ன சொல் லாகவே தோன்றுகிறது. ஐவருக்கும் என்றவுடன் என் நெஞ்சம் நடுங்கியது. அரண்மனைக்கு வந்தபின் அப்பா குந்தியின் முடிவைப் பலமாக எதிர்த்தார். தருமரோ தன் தாயின் நாவில் அதருமமே உதிக்காது என்று வாதித்தார். அப்பாவின் ஆக்ஷேபம் நிற்கவில்லை. - ஐவருக்கும் நான் பத்தினியானேன். எனக்கு வாய்த்த ஐந்து கணவர்களும் என்னிடம் நடந்து கொண்ட விதந்தான் என்னைக் கர்ணனைப் பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச் சென்றது. இந்த ஐவருக்கும் மேலாக கர்ணனிடம் தான் எனக்கு மனசு ஒட்டக்கூடிய பாசம் இருந்தது. தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவி என்றால் சதி என்றால் தெய்வீகப் பொருள், அவர் பள்ளி யறையில் வைத்துக்கொண்டுகூட திடீரென்று நீதி சாஸ் திரம் போதிக்க ஆரம்பித்து விடுவார். பீமரோ காத லுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை இடிம்பை தான் அவருக்குச் சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜுனருக்கு, நான் பலரில் ஒருத்தி. அவருக்குச் சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரெளபதி யானாலும், சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல சகதேவர்கள் என் கண்ணுக்கு கணவர்களாகவே தோன்ற வில்லை மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக் குஞ்சுகளாகத்தான் தோன்றின்ர். இதனால்தான் இந்த ஐவரில் எவர்மேலும் அன்பு செலுத்தமுடியவில்லை. உலகமும், அவர்களுக்கு என்
பக்கம்:முல்லை கதைகள்.pdf/103
Appearance