பக்கம்:முல்லை கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 நின்றார். நெடுமரம்போல நின்றார். நான் அவர் பக்கம் சென்றேன். - - 'திரெளபதி, நீயும் அழுதாயா?...நான்தான் பாபி' என்றார் அவர், - 'பகையை முடிப்பது பாபமா?' என்றேன். 'கண்ணன் களத்தில் - உபதேசித்தது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது. கர்ணனைக் கொன்று விட் டேன். ஆனால் கர்ணன் என் அண்ணன்!' "அண்ணனா?' என்று அலறிவிட்டேன் நான். 'ஆம். குந்திதேவியின் தலைப்புத்திரன். பிருதைக்கு துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தின் விஷப்பரீrை யின் விளைவு கர்ணன், அவன் தேர்ப்பாகன் மகனல்ல; சூரிய புத்திரன். நான் கிடந்த கருப்பையில்தான் அவனும் கிடந்திருக்கின்றான். அவன் என் அண்ணன்! உடன் பிறந்த அண்ணன்!" என்று சொல்லிக் கொண்டே போனார் அர்ஜுனன். எனக்குத் தலை கிறங்கியது. 'உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்றேன். எப்படியா? குந்திமாதா களத்தில் கர்னனை மடிமேல் போட்டுக்கொண்டு ஊரறியக் கதறுகிறாளே. உனக்குத் தெரியுமா?' என்றார். கர்ணன் குந்தி புத்திரன்-என்று முணுமுணுத்தது என் வாய், - 'கண்ணனுக்கும் இந்த ரகசியம் முன்னமேயே தெரி யுமா?' என்று கேட்டேன், எனக்குத் துகிலளித்த கண்ண னுக்கு, கர்ணனை நான் விரும்புகிறேன் என்ற ரகசியமும் ஆதியிலிருந்தே தெரியும். குந்தியின் ரகசியமும் தெரிந் திருந்தால்-என்று உள்ளம் எண்ணிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/105&oldid=881440" இலிருந்து மீள்விக்கப்பட்டது