பக்கம்:முல்லை கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 எனினும் அவன் என் விரோதி; இன்று எங்களை போர்முகத்தில் எதிர்த்து நிற்பவன், அர்ஜுனனை உதாசீனம் செய்தது தவறுதான். பேடி'-கொஞ்சமும் யோசிக்காமல்தான் கூறிவிட்டேன். கண்ணன் மட்டும் வந்திராவிட்டால் குருக்ஷேத்திரமே வேறுவிதமாய் மாறியிருக்கும். அன்று கர்ணனிடம் தோற்றுவந்ததால் ஏற்பட்ட பீதியின் மூட்டத்தில் அறிவு மயக்கம் போட்டுவிட்டது இல்லாவிடில் அப்படி நடந் திருக்கவே மாட்டேன். கர்ணனும் மானுடன்தான். அவனை வெல்ல முடிய வில்லையென்றால் அன்று திரெளபதி சுயம்வரத்திலும் கர்ணன் விழுந்துவிட்டான். ஆனால் இன்றும் அர்ஜூன னுடைய காண்டீபத்துமுன் விழுந்து விடுவான் என்பது என்ன நிச்சயம்? ஆனால், கண்ணன் கை கொடுத்து உதவும்போது அர்ஜுனன் ஜெயித்தே தீருவான்! ஜெயித்து விடுவான். தாரத்தில் ஏங்கிக்கொண்டிருந்த சங்கின் ஒலி பயங் கரமாக விரிந்து ஹாலிங்காரமாகச் சிலிர்த்தது. சங்கநாதத் தின் முழக்கத்தோடு தாரைகளின் ஓசையும் முயங்கிச் சங்கமித்து உள்ளத்தை உலுப்பியது. பாஞ்ச சன்யமா முழங்குகிறது' வெற்றி முழக் கமா?...... அர்ஜுனன் ஜெயித்துவிட்டானா?...கர்ணன் விழுந் தானா? பாண்டவர்களின் கலி விழுந்ததா? நான் திகைக்தேன். பயத்தின் அலைகள் தேய்ந்து இற்று ஆச்சர்யத்தில் வடிவாகிக் கரைந்தன. தூரத்திலே தெரியும் அந்திவான் மேகக்கூட்டத்தின் ரத்தக் கொழுப்பு உள்ளத்தில் ஆத்திரத் தையும் வெறியையும் ஊட்டிற்று எழுந்தேன். மு. க.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/107&oldid=881442" இலிருந்து மீள்விக்கப்பட்டது