பக்கம்:முல்லை கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நின்றான். நான் அவனைப் பார்த்தேன். அவன் சொன்னான்: 'தருமா, வருந்தாதே, கர்ணன் கதை முடிந்தது!" கண்ணன் யார் கதை முடிந்தது? என் கதைதான். மகாபாரதம் என் கதை. கெளரவ பாண்டவ மரப்பாச்சிகளுக்கு நான்தான் சூத்திரதாரன். அவர்களை நான்தான் ஆட்டம் கண்டேன்; நானும் ஆடினேன். இந்திரன், விதுரன், குந்தி, தருமன், திரெளபதி துரியோதனன் எல்லோருமே என் கைப் பொம்மைகள். - என் மன விகாசத்தின் பரந்த .ெ வ ளி த ா ன் குருrேத்திரம். அதில் இரு சக்திகள் மோதின. அதற்கு பாரத வம்சம் எல்லாம் கருவிகள்-கர்ணன் மத்திய பாத்திரம். குந்தி இளமையில் செய்துவிட்ட பாபத்தைப் புதைத்துவிட எண்ணினாள். கர்மாவின் கழுத்தை நெரித்துவிட நினைத்தாள். ஆனால், இன்று அது மீண்டும் தலை நீட்டி, அவள் உள்ளத்தைப் பலி கொண்டது. ஜென்ம ஜென்மாந்திரத்துக்கு கர்மா தன்னைத் தொடரும் என்பதை அன்று.-பிருதையாக இருந்த அன்று- குந்தியால் உணர்ந்துகொள்ள முடிய வில்லை. அர்ஜூனனின் மமதை கர்ணனின் மறைவோடு மடிந்தே தீரும். திரெளபதி-பாவம்! அவளும் கர்ணனை உள்ளத்தினுள்ளேயே, கொன்று விடவேண்டியதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/110&oldid=881446" இலிருந்து மீள்விக்கப்பட்டது