பக்கம்:முல்லை கதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 யிருந்தது. கடோத்கஜனை இந்தச் சூதில் பணயம் வைத்து வெட்டுக்கொடுக்க வேண்டிவந்தது. கர்ணனைக் கொன்றுவிட்டேன். எனினும் வெற்றி எனக்கல்ல ஆவைப் பறிகொடுத்த அந்தணன் சாபமும் குந்தியின் வரமும், இந்திரன் பிச்சையும், கடோத்கஜப் பணயமும் கர்ணனை நிராயுதனாக்கிவிட்டது. நான் வெற்றி யடைந்தேனாம். பாரதம் முடிந்துவிட்டதாம். வளைந்து நிமிர்ந்து உயிர்களை வதைத்த காண் டீபம் கர்ணன் ரத்தத்துக்காகத் தவம் கிடந்தது, எனினும் காண் டீபத்துக்குப் புகழ் கர்ணன் புகழ்ந்தான். கர்ணன் இல்லாவிட்டால் காண் டீ பம் ஏது? அர்ஜுனன் எங்கே? எனக்கு வில்லுக்கு விஜயன் என்ற பெயரும் ஏது? கர்ணன் புகழை இன்று நான் என் புகழாக்கிக் கொண்டேன். ஆனால், இதற்கு இத்தனை பேரின் உதவியா? - * இன்று காண்டீபம் அயர்ந்து கிடக்கிறது. கர்ணனின் வாழ்வுதான் காண்டீபத்தின் வாழ்வு. கர்ணன் இறந்தால், காண்டீபமும் தானாகவே இறந்துபடும். கர்ணன் போன்ற எதிர்க்குறி இல்லாவிட்டால்? காண் டீயத்தை வைத்துக்கொண்டு வேட்டையா ஆடுவது? கர்ணனின் மரணத்தோடு காண்டீபத்தின் நானும் அறுந்தது: வாழ்வும் அறுந்தது. காண் டீபம் வாழ வேண்டுமென்றால் கர்ணனும் வாழவேண்டும். கர்ணன் வாழ்ந்தால்தான் நானும் வாழ முடியும். இல்லையெனில், நான் வில்லும் சுமக்கப் பிறந்தவன்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/112&oldid=881448" இலிருந்து மீள்விக்கப்பட்டது