பக்கம்:முல்லை கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 6 குருக்ஷேத்திரக் களத்தின் ரத்தச்சேறு காய்ந்து கருகி, மண்ணோடு மண்ணாய்ப் போய்விட்டது. நரிகளும் கழுகுகளும் குகைகளிலும் வனங்களிலும் அடங்கிவிட்டன. கீறிப் பிளவுபட்ட பூமியில் அக்கினிக் கொதிப்பு அடங்கி, ஊற்றுக்கள் சுரந்தன. கலங்கிய ஆகாசத்தின் மூட்டம் தெளிந்து வானம் நிர்மலமாயிற்று. இன்று இந்திரப் பிரஸ்தத்தில் தருமன் ராஜ்யமேற்றுக் கொள்கிறான். பிதுர்க்களுக்குக் கடன் செய்துக் கண்ணிர் சிந்திய தருமனுடைய அதே கைசனில் இன்று மிகுடாபிஷேக தீர்த்தம் வழிந்தோடியது. அன்று கர்ணன் காலடியில் உருண்டோடி மண்ணில் புரண்ட கிரீடம் இன்று தருமன் சிரசில் ஏறியிருந்தது தருமன் இன்று . த த் தி ன் அரசன். ஏக சக்கராதிபதி. முடிசூடி அமர்ந்திருந்த தருமபுத்திரன் சந்நிதியில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் தங்கள் காணிக்கை களைச் செலுத்தினார்கள். வைரங்கள், ரத்தினங்கள்: முத்துக்கள், பட்டு, தந்தம்-என்னவெல்லாமோ குவிந்து கொண்டே இருந்தன. குந்தி புத்திரனை ஆசீர்வதித்தாள் கண்ணன் பாராட்டினான். தம்பியர் ஒவ்வொருவரும் அண்ணன் திருவடியில் வ ந் த ன ம் செலுத்தினர். கடைசியில் அர்ஜுனன் வந்தான். கையில் நாணவிழ்த்த காண்டிபமும் இருந்தது. வந்தவன் வணங்கவில்லை; நின்றான். 'அர்ஜூனனா. ஏன் வாடியிருக்கிறாய்? “ என்று தரும ராஜா கேட்டான், "அன்று பாசறையில் தாங்கள் பேசியது ஞாபக மிருக்கிறதா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/113&oldid=881449" இலிருந்து மீள்விக்கப்பட்டது