பக்கம்:முல்லை கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 'கர்ணன் கொலையை நினைக்கிறாயா?" "ஆம். காண்டீபத்தின் சேவைக்குக் கடைசி ஆகுதி கர்ணன் என்றேனே. காண்டிபம் குனிந்து நிமிர்ந்தது. கர்ணனும் மாண்டான்?' என்றான் அர்ஜுனன். "பழம் வினையை ஏன் நினைவுக்கிழுக்கிறாய்?" 'அண்ணா. உங்களுக்குத் தமையன் இறந்தானே என்ற வ்ருத்தம், எனினும் , தம்பியர் நாங்கள் இருக்கிறோம். குந்திமாதாவுக்கு தலைப் புத்திரன் மடிந்தானே என்ற துயரம். எனினும் ஐவர் இருக் கிறோம். ஆனால் எனக்கோ ஒரே எதிரி. அவன் போய் விட்டான், காண்டீபத்தின் வலிமைக்குப் பதில் சொல்லக் கூடியவன் கர்ணன் ஒரே ஒருவன்தான். அவன் போய் விட்டான். இன்று நான் தனியன்! தனியன்' என்று கதறினான் அர்ஜுனன். - தருமன் திகைத்தான். தன்னைத் தேற்றிக்கொண்ட அர்ஜுனன் யுதிஷ்டிரா தங்கள் முன்னிலையில் இதோ என் கைக் காண்டீயத்தை அர்ப்பணித்து விடுகிறேன்' என்றான். தருமன் சிந்தித்தான். அர்ஜூனன் இன்னும் தன் பகைமையுணர்ச்சியைக் கொல்லவில்லை என்று ஆத்திரப் பட்டான் அர்ஜூனனுடைய உண்மையான வீர உணர்ச் சியை அவனால் உணரமுடியவில்லை. தருமன் தன் முன்வைத்த காண்டீபத்தை கோபத் தோடு எடுத்து விட்டெறிந்துவிட்டுச் சொன்னான் : 'தரும சாம்ராஜ்யத்தில், வில்லுக்கு வேலை யேது?" பக்கத்து மண்டபக்காலில் மோதிக் கீழே விழுந்தது காண்டீபம். அதில் நாணின் நாத ஜங்காரம் இல்லை : விறைப்பு இல்லை; வீரியம் இல்லை; உயிர்ப்பும் இல்லை. பக்கத்தில் நின்ற கண்ணன் சிரித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/114&oldid=881450" இலிருந்து மீள்விக்கப்பட்டது