பக்கம்:முல்லை கதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக் குலுக்கிய வண்ணம் திண்ணையில் உலன்யபடி, சமாதானப்படுத்த முயன்று கொண்டே: "கொஞ்சம் அவசரப் படாமே தான் சொல்றதைக் கேளு-இன்னிக் காலையிலே இப்படிப் போனேனாஇந்த ரோட்டோடே போனேன்-அப்புறம் ஒரு சந்திலே துளைஞ்சேன். ஆனால் அது சந்தில்லே. ஆள் நடமாட்டம் அதிகமாயில்லை. ரெண்டு பக்கமும் தனித்தனியா பங்களாவுங்க இருந்திச்சு. அப்புறம் அப்படி திரும் பினேன் இப்படி திரும்பினேன். எனக்கு வழி மறந்து போச்சு சுத்துமுத்தும் பாத்தா ஒத்தருமில்லே. எனக்கு, ஒரே அளுகையா வந்துட்டுது. நான் ரோட்டோரமா நின்னுட்டு அளுதுகிட்டு இருந்தேன் 'அப்பேர் ஒரு ஆள் அந்தப் பக்கமா வந்தான். என்னைத் தாண்டிப்போனான். அப்புறம் திரும்பிப்பார்த் தான். நின்னான் மேலே இன்னும் கொஞ்சம் நடந்து போனான். மறுபடியும் என்னை முழிச்சுப் பார்த்தான். அவன் பார்வை ஒரு மாதிரியா யிருந்துச்சு, என் முகத்தைப் பார்க்கல்லே. களுத்துக்குக் கீளே, இடுப்பு வரைக்கும்தான் கண்ணோட்டம் நின்னுது. அப்புறம் எண்ணத்தை என்னவோ திடம் பண்ணிக்கிட்டு திரும்பி நேரே வந்தான். "ஏன் அழுவரே? எந்த ஊர்?" "ஐயா ஊருக்குப் புதிசு-நாட்டுப்புறம் வழிதப் பிப் போச்சு'-என்னேன் விக்கிக்கிட்டே. ஏன் வந்தே இந்த ஊருக்கு?" - "புளைக்க வந்தேனுங்க. எங்கேயாட்டும் பத்துப் பாத்திரம் துலக்கிப்போட்டு வாசற்கூட்டி வேலையகப் பட்டா போதுங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/120&oldid=881458" இலிருந்து மீள்விக்கப்பட்டது