பக்கம்:முல்லை கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 19 "அந்த ஆள் என் களுத்தைப் பார்த்துகிட்டே. 'கலியாணம் ஆயிட்டுதா-ன்னு கேட்டான். 'கையிலே ஒரு குழந்தை யிருக்குதுங்க-என் எசமானர் கிட்டே விட்டுட்டு வந்திருக்கேனுங்க." 'எத்தனை வயசு?' 'இரண்டு மாதங்க-' 'சரி வா. உன்னதிர்ஷ்டம் இந்த பக்கமா நான் வந்தேன்-உனக்கு வேலை வாங்கித்தரேன் என்னோடுவா' இன்னுட்டு நடந்தான். எனக்கு கொஞ்சம் பயமாய்த் தானிருந்தது. இருந்தாலும் ஆள் நடமாட்டமிருக்கிற இடமா வந்து சேர்ந்துட்டா சமாளிச்சுக்கலாம்னு மனசைத் தைரியம் பண்னிகிட்டுப் பின்னாலேபோனேன். 'நீ முழிக்காதே. அவன் ஒன்னும் தப்பா நடந்துக் கல்லே ஒரு பங்களாக்குள்ளே துளைஞ்சோம். பெரிய தோட்டம் பூவும் செடியும் பாத்தியும் பச்சையும் எங்கே பார்த்தாலும் ஒரே குளுமையாயிருந்தது. கன்னுக்குட்டி யாட்டமா ஒரு பெரிய நாய் என்னைப் பார்த்து ஒடி வந்துது. அந்த ஆள் அதை விரட்டிட்டு என்னை வாசல் தாழ்வாரத்திலே நிறுத்தி வச்சுட்டு உள்ளே போனான். சித்தே நேரம் பொறுத்து மூணு பொம்புள்ளேங்க உள்ளேருந்து வந்தாங்க. பாப்பாரு பணக்கிாரு, நகையும் நட்டும் நல்ல புடவையும் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்குள்ளே என்ன வோ வெள்ளைக்காரன் பாஷைலே பேசிக்கிட்டாங்க. அவங்களுக்குள்ளே ஒரு பெரிய அம்மா இருந்தாங்க. அந்த ஆள் என்னை மொதமொதல்லே விசாரிச்சமாதிரியே, அவங்களும் விசாரிச்சாங்க இன்னும் ஒன்னுரெண்டு பொம்புள்ளே விஷயங்கூட விசாரிச்சாங்க. அப்புறம் அங்கேயே குந்தவெச்சு ஆளுவந்து சோறுபோட்டா குளுகுளுன்னு பழஞ்சோறு ன்ன் வயிறு குளுந்தது. ஒன்னெ நினைச்சுக் கிட்டேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/122&oldid=881460" இலிருந்து மீள்விக்கப்பட்டது