பக்கம்:முல்லை கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 'கை களுவி, தண்ணி யேந்தி கு டி ச் சு. ட் டு, முந்தானைலே கையைத் தொடச்சிக்கிட்டேன். உடனே இங்கிலிசுலே என்னவோ பேசினாங்க. பொம்புள்ளேங்க ஆம்புள்ளே மாதிரி இங்கிலீஸ் பேசி இன்னிக்குத்தான் நான் பார்த்தேன். உடனே ஒரு அம்மா உள்ளே போய் ஒரு குழந்தையை ஏந்தி வந்து என் மடியிலே வெச்சு பாலைக் கொடு இன்னாங்க. "எப்படி மாட்டேன்றது? சோறு போட்டிருக்காங் களே உப்புந் தண்ணியும் உலர்ந்த வயத்திலே ஊத்தியிருக் காங்களே! 'குளந்தையா அது? நம்ம ஊரிலே முருங்கை மரத்துலே இடையன் கொம்பு ஊறல்லே! அதுமாரி ஒரே குச்சியா. உயிர் தொண்டையிலே நூலாட்டமா ஒடிக் கிட்டிருக்குது. தொடவே அச்சமாயிருந்தது. "தாய்ப்பாலில்லே. குழந்தைக்கு வேறு குத்தம் இல்லே. உனக்கு ரெண்டுவேளை சோறு-ரெண்டு வேளை தீனி மாஸம் எட்டு ரூபா கொடுக்கறேன். இங்கே இருந்து இந்தக் குழந்தையை நீ காப்பாற்றலும். வீட்டுக்கு ஒரே பிள்ளையிது. இருந்திருந்து பெற்ற மகன். நீ இருந்து காப்பாத்தனும். இன்னாங்க அந்தப் பெரியம்மா. 'அம்மா!-என் குழந்தை?-' நானறியாமலே அந்தக்கேள்வி என் வாயிலேருந்து வந்துட்டுது. 'உன் குழந்தைக்கு மாவு கரைச்சுக்கொடு-மாவு நான் கொடுக்கறேன். இந்தக் குழந்தைக்கு வயிற்றிலே கட்டிவிழறது. உன் குழந்தை இதமாதிரி மோசமாயிருக் காது. என்ன சொல்றே சட்டுபுட்டுனு உன் புருஷன் கிட்டே சொல்லிட்டு வந்திடு. காலையிலே ஒரு வேளை சாயந்திரம் ஒருவேளை ஒன் குழந்தையும் பார்த்துட்டுவா -நான் ஒன்னும் அப்படியாப்பட்ட பாவியில்லே-என்ன சொல்றே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/123&oldid=881461" இலிருந்து மீள்விக்கப்பட்டது