பக்கம்:முல்லை கதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

及器盛 கரையினின்று திரும்பும் அலைகள்போல் நினைவுகள் பின்னோக்கிச் சுருண்டன . . 'நல்லபடியா நாலுபேர் பேசி முடிச்சுத் தாலி கட்டின கலியாணமாயிருந்தால் இத் த ைன கஷ்டம் ஏன் படனும் ஒரு இமைப்பொழுது வெறியிலே ஏமாந்துபோன தோஷத்துக்காக, ஊரைவிட்டு ஓடிவந்து இங்கே இருக்க இடமும் புளைக்க வழியுமில்லாமே அல்லாடறோம்...' வாய்வழி புறப்படாத விதவிதமான கேள்வி கள் அவரவர் மனசை இடித்தன. -நம்ம ஊரே நல்ல ஊர், -நான் பாட்டுக்கு நிம்மதியா ஊருக்கு முதலாளி வெச்சிருக்கும் மளிகைக் கடைலே வேலை செஞ்சுகிட்டு வேளா வேளைக்கு அவர் வீட்டிலேயே சாப்பிட்டு வேட்டி யுடுத்திக்கிட்டு: கைச்செலவுக்குத் தினம் கால்ரூபா கல்லாப் பெட்டியிலிருந்து எடுத்துக்கிட்டு ராசாமாதிரி யிருந்தேன். . -எனக்கு மாத்திரம் என்ன கொறைச்சல்? வீட்டு வேலையை செஞ்சிக்கிட்டு அவங்க கெளந்: தையை கொஞ்சிக்கிட்டு குசாலாய்த்தானே யிருந்தேன்! அப்பன் ஆயில்லேன்னு ஒரு நாளா வது நெனைச்சிருப்பேனா அந்த வீட்டு அம்மா தான் எனக்கு எல்லாமா இருந்தாங்களே! --இருந்து என்ன பிரயோசனம் உன்னை எங்கேயாவது கட்டிக்கொடுத்து ஒழிச்சிருக் கனும். -ஐயோ பண்ணையிலே ஒரு ஆளுக்குத்தான் என்னை முடிச்சுப்போட்டு வெச்சிருந்தாங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/125&oldid=881463" இலிருந்து மீள்விக்கப்பட்டது