பக்கம்:முல்லை கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 -உடலும் மனசும் ஒண்ணுக் கொழஞ்சு நாம் ஆசையாப் பெற்ற குழந்தையே உலகத்துலே எல்லாரும் பெத்து வளக்கறமாதிரி வளக்க முடியல்லே. கழுத்துலே மஞ்சள் கவுறுஏறத்துக்கு முன்னாலே வயிற்றுலேருந்து இறங்கற குளத் தையை யார் மதிக்கிறாங்க? திருட்டுப் புள் ளைன்னு ஊரெல்லாம் சிரிக்க மானம், போய் உசிர் போகாமே ஊரை விட்டு ஓடி வந்துட் டோம்வந்து இங்கே மாட்டிக்கிட்டோம். -விதி -விதி. மனதின் பேச்சுக்கு முடிவே கிடையாது. 2 அந்தக் குழந்தையின் பசியை ஆண்பிள்ளை அவனா எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும்? அவள் மாலையில் வந்து ஒரு வேலை ஊட்டுவாள், காலையில் மாவையும் தண் ணிரையும் கரைத்து புட்டியில் போட்டுவிட்டு அவள் போவாள். புட்டியை எந்தப் பக்கம் குழந்தையின் வாயில் வைப்பது என்றுகூட அவனுக்கு சரியாய்த் தெரியாது. 'காலையில் வேலைக்கு அலையனும். கொள்ந்தை யைத் தனியா விட்டுட்டு எத்தனை நேரம் வெளியிலே சுத்த முடியும் மாலை வரது எப்போ? அவள் வருவது எப்போ? அந்தக் கொளந்தையே அவள் மார்மேலே அணைப்பது எப்போ தொண்டையைக் கிழிச்சுக்கிட்டு ஓயாத அதன் அலறல் ஒய்வது எப்போ? ஒரே வேளை யாண்ாலும் பெரிய வேளை! இன்று அவன் குழந்தை தலைமீது மேலாக்கைப் போட்டு முடியும் அதன் கத்தல் ஒயவில்லை. அவனுக்கு வயிறு கொதித்து. ஏன் ஏமாத்தறே? நீ வந்து ஊட்டறது ஒரு வேளை. அதிலே ஏன் வஞ்சனை பண்ணறே? பங்களா விட்டுப் பையன் மாதிரியில்லையா நீ பெத்த மவன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/127&oldid=881465" இலிருந்து மீள்விக்கப்பட்டது