பக்கம்:முல்லை கதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 "ஏன் இப்படியெல்லாம் பேசறே நான் என்ன பண்ணுவேன்? அந்தப் பையன் அட்டை மாதிரி உறிஞ்சிப் போடுதே. ஊறக்கூட நேரம் விடமாட்டேன் னுதே. மூக்காலே பாலு வந்தாலும் வெச்ச வாய்க்கடி விடமாட் டேன்னுதே! "இங்கேயும் இருக்குதேன்னு கொஞ்சம் வெச்சுக்கிட்டு வரது' அவங்கத்தான் என் எதிரேயே உக்காந்து கவனிக் கறாங்களே மடியிலே பிள்ளையை விட்டுட்டு அந்தப் பெரியம்மா என் எதிரே சட்டமா குந்திக்கறாங்க கொடுடி; கொடுடி குழந்தைக்குக் கொடுடீ இந்தப் பக்கம் வத்திப் போனா அந்தப் பக்கம் மாத்திப் போட்டுக் கோன் னு ஈவு இரக்கமில்லாமே பேசறாங்க." சோத்திலே நெய்யைக் கைநிறைய அள்ளித்தானே விடறேன்! ஆப்பிள் பழமும் ஆரஞ்சிப் பழமுமா வாங்கி வாங்கிக் கொடுக்கல்லே. என் எதிரிலேயே உறிச்சித் தின் னுடனும். என் குழந்தைக்கு ஊறும்பாலை என் குழந்தை தான் குடிக்கணும். என் வீட்டுக்கே ஒரு குழந்தையடீ-' அவங்க விதவிதமாத் தீனி வாங்கிப்போட றாங்க சொகம் சேக்கராங்க ஆசை உனக்கு அங்கேதான் பொங்குதாக்கும்!” 'ஏன் இப்படி சொல்றே அங்கே தின்கறது விஷமா யிருக்கிறது போதாதுன்னு நீ வேறே இங்கே வந்தா விஷத் தைக் கக்கணுமா? என் வயத்திலே சுமந்த என் குளந் தையே நான் மறந்துட்டேன்னு நீ எனக்குப் போதிக்க வேணாம்-' " அடிபோடீ பாவி-'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/128&oldid=881466" இலிருந்து மீள்விக்கப்பட்டது