பக்கம்:முல்லை கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll அவன் கூறியதைக் கேளுங்கள் : 'நான் கருப்பகவுண்டனைக் கொலை செய்தேன் என்பது உண்மைதான். ஆனால் நான் குற்றவாளியாக மாட்டேன். பத்துப் படிகாட்டை நான் எருவிட்டு உழுது, விதைத்து. கவலை இறைத்து, களைகளைப் பிடுங்கிக் காத்து, வளர்த்து, அறுத்து அடித்துச் சேர்த்துக் குவித்தவுடன் கருப்பகவுண்டன் எம கிங்கரன்போல் வந்து நிற்பன். ஆண்டுதோறும் அவனுக்கு நான் ஐநூறு ரூபாய் கொடுத்தாகவேண்டும். நான் உழுதுவந்த காடு அவனுக்குச் சொந்தமாம். எனக்கு முன் என் தந்தை அக், காட்டை உழுது வந்தான். என் தந்தைக்கு முன் என் பாட்டன் முப்பாட்டன் ஆகியோர் அதை உழுதுவந்திருக் கிறார்கள். எனவே தலைமுறை தலைமுறையாக நானும் என் மூதாதையரும் உழைத்து உழைத்து கருப்பக் கவுண்டனுக்கு ஆண்டுதோறும் ரூபாய் ஐநூறு செலுத்தி வந்திருக்கிறோம்.' - என் தந்தை எனக்கு வைத்துவிட்டுப்போன சொத்து எனது உடலும், கருப்புக் கவுண்டன் சொந்தங்கொண் டாடும் பத்துப்படி காடும்தான். என் தந்தை இறந்த மறு தினமே அவர் வைத்துழைத்த எருதுகளிரண்டும் எமபுரம் சேர்ந்தன. நான் கருப்ப கவுண்டரை அணுகிக் கானை கள் இரண்டு தந்துதவுமாறுகேட்டேன். அவன் கடுங் கோபத்தோடு என்னைப்பார்த்தான். “காட்டைக் காவி செய்து விட்டுப்போடா' என்று அடைமொழிகள் பலவோடு அலங்கரித்துக் கூறினான். கிணறுவெட்டப் பூதம் புறப்பட்ட கதை போலான தென்று நான் மெளனமாக என் மனைவியிடம் சென்று தெரிவித்தேன். அவள் பத்தினி. தன் கழுத்திலிருந்த மாங்கல்யச்சரடு நீங்கலாக, மற்ற நகைகளையெல்லாம் கழட்டி என் கையில் கொடுத்தாள். அவளுக்கு நான் என் முகநகை தவிர வேறு எந்தகையும் பூட்டியதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/13&oldid=881469" இலிருந்து மீள்விக்கப்பட்டது