127 -திரும்பி வராட்டா லும் நம்ப மகன் இருப்பான் இல்லையா! - அவன் மனசிலேயே ஒரு பெரும் கனம் குறைந்தது. சந்தோஷம் கூடப் பிறந்தது. அந்தப் பேர் லீஸ்காரனை அணுகினான். சண்டையிலே சேக்கற ஆபீஸுக்கு வழி எந்தப் பக்கம்?" 4 அவன் திரும்பிவரும் வேளைக்குள் அஸ்தமித்து விட்டது கொளந்தையை நினைத்துக்கொண்டே அவன் ஒடோடி வந்தான். இன்றைக்கென்று அவள் அவனுக்கு முன்னாலேயே வந்திருந்தாள். அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு முகம் மலர்ந்தது. ஆனால் அவள் முகம்மாறித் திகில் பிடித்துப் போயிருந்தது. "ஐயோ கொளந்தையைப் பாரேன்!' என்றாள் கையைப் பிசைந்துகொண்டே. அவனுக்கு அடிவயிற்றில் சுரீலென்று ஜில்லிட்டது. உள்ளே ஓடினான். அதன் காதில் ஒரு நூல் ரத்தம் வழிந்திருந்த்து. வயிறு உப்பி... அதன் அருகே உட்கார்ந்தான் அவளும் குழந்தையின் அந்தண்டைப் பக்கம் உட்கார்ந்து கொண்டாள் ஆனால் அதை அவன் உணர்ந்தானேயொழிய காணவில்லை. அவன் பார்வை குழந்தையின்மேல் நிலை குத்திப்போ யிருந்தது "என்ன சுருக்க வந்துட்டே?” 'எனக்கு இன்னிக்கு மனம் தாளல்லே. சண்டை போட்டுக்கிட்டு வந்து ட்டேன்.' அவளும் சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டா. அவனும் சண்டையிலேபோய் சேர்ந்துட்டான். ஆனால்
பக்கம்:முல்லை கதைகள்.pdf/130
Appearance