பக்கம்:முல்லை கதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பிரயோசனம் என்ன? ஒண்னுமில்லே குளந்தையே பாத்தவுடனேயே அவனுக்குத் தெரிஞ்சுபோச்சு அதுக்கு மூச்சு சத்தம்போட ஆரம்பிச்சுட் டு து 'கொர்கொர்ன்னு-" அவள் வயிற்றிலேயும் வாயிலேயும் அடித் துக் கொண்டு அழுகிறாள். ஆயினும் அவன் மனம் பளிங்கெனத் தெளிந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. "எல்லாம் பாரத யுத்தம் மாதிரிதான். ஊரிலே தருமராஜா கோவுல்லே காப்புகட்டி பாரதம் உபன்யாசம் வெச்சாங்களே-எல்லாரும் தோத்தாங்க எல்லாரும் ஜெயிச்சாங்க ேத் ா த் தவ னு ம் கஷ்டப்பட்டான். ஜெயிச்சவனும் சுகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக்கிறாப்பிலே, சண்டை போட்டதிலே கொறைச் சலில்லே, நாள் பாத்ததிலே கொறைச்சலில்லே-பலி போட்டதிலே கொறைச்சலில்லே --அரவான்.பலி. '-கொர்-கொர்-ர்' "மொதல்லே புளைக்கிற வளியைக் கண்டுட்ட மாதிரி குளந்தையைப் பலிவெச்சோம். அப்புறம் அதுக்குமேலே ஒசத்திக்காரியம் பண்றாப்பிலே சண்டையிலே போய் சேர்ந்தாச்சு இனிமேல் தப்பமுடியாது. கைநாட்டுக் கொடுத்தாச்சி. நாளை மத்தியான வண்டிக்குப் புறப் படனும் அப்புறம் அந்த வண்டியிலே எங்கேபோய் தள்ளறானோ போவாமே இருந்தோம்னா நாளைக்கு கைக்கு விலங்கோடே வந்துடுவான். பூட்டின்மேல் பூட்டு. புளைக்கற வழி என்ன? சாவுர வழிதான்! "சண்டைக்குச் சேர்ந்த சமாசாரத்தை இவகிட்டே சொல்லல்லே. அது வேறுபாக்கியிருக்கு கொழந்தையைப் புதைச்சுட்டு வந்தப்புறம் இருக்குது அந்த ரகளை "ஆனால் சண்டையிலேபோய்ச் சாவறத்துக்குன்னு ஒரு சாவுபாக்கியில்லே இப்போ நான் செத்துபோயாச்சு. உசிரோடு இருக்கிறது உசிரில்லே, உடல்தான். இதுவும் மடியறது இன்னிக்கில்லாட்டா நாளைக்கு, நாளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/131&oldid=881471" இலிருந்து மீள்விக்கப்பட்டது