அவதாரம் புதுமைப்பித்தன் சிருஷ்டி எப்படி உண்டாகிகிறது? மனத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பினாலே? துடிக்குதென் உதடும் காவும் சொல்லு சொல் என்றே இடிக்குது குறளி' என்பதைப் போல், பொங்கி வரும் உணர்ச்சியின் வெளியீட்டினாலா? சிப்பிப் புழுவின் உடம்பில் பட்டு உறுத்தி உறுத்தி வேதனை எழுப்பும் மழைத்துளியைப்போல். மனசில் விழுந்த உறுத்தும் விஷக் கறையினாலா? மனசில் கறையின் உறுத்தல் இருந்தாலன்றி சிருஷ்டி உண்டாகாதா? கதையைப் படியுங்கள். பாளையங்கால் ஒரத்திலே, வயற் பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குல மாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றுாரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர் களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான், முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் குறை கிடையாது, ஊரில் செயலுள்ளவர்கள், யாதவர் களே .
பக்கம்:முல்லை கதைகள்.pdf/133
Appearance