131 கிருஷ்ணக்கோனார் என்ற கிருஷ்ணசாமிதாஸ் யாதவர்களுக்குள் யோக்கியர் என்ற பெயர் வாங்கியவர். யோக்கியர் என்றால் அயோக்கியத் தன்மையில் இறங்கா தவர் என்றே அர்த்தம். சந்தர்ப்ப வசதி இல்லாத தினாலோ என்னவோ நல்லவராகவே பெயரெடுத்து வந்திருக்கிறார். - ஆனால் விதி, உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாத வரை காத்திருந்துவிட்டு, அவருக்கு ஒரு குழந்தையை-ஆண் பிள்ளையை-மட்டும் கொடுத்து. மனைவியை அகற்றி அவருடைய நடமாடும் சொத்துக் களான கால் நடைகளிடையே கோமாரியைப் பரப்பி விளையாடியது. ‘. . வெகு சீக்கிரத்தில் கஷ்டங்களை அறியலானார். சாப் பாட்டுக்கும் கஷ்டம் வந்தது. குழந்தையை வைத்துக் கொண்டு பராமரிப்பது தலைக்கட்டு நிர்வாகத்தை விடத் தோன்றியது கிழவனாருக்கு. - பையனுக்கு இசக்கிமுத்து எனப் பெயரிட்டு, இசக்கி யின் அருள்விட்ட வழி என ஏக்கத்திலும், ஏமாற்றத்தி லும் ஏற்படும் நிராதரவில் பிறக்கும் திருப்தியை பெற்றார். குழந்தையும் நாளொரு ஏமாற்றமும் பொழுதொரு கஷ்டமும் அனுபவித்து வளர்ந்து வந்தது. விதியின் கொடுமையைக் கண்டு சீற்றமடைந்தோ என்னவோ, இயற்கை அவனுக்குத் தன் பரிபூரண கிருபையை வருவதித் தது. உடலும் மனமும் வறுமையின் கூர்மையிலே தீட்சண் யப்பட்டு வளர்ந்தது. இசக்கிமுத்துவைப் பார்த்தால், மனம் அவன் காலடி யில் விழுந்து கெஞ்சும். ஆனால் அதே மனம் அவனுக் காக கண்ணிர் வடிக்கும். அவனது முகச் சோபை அப்படி. குழந்தையின் துடிவைக்கண்டு கோனார் அவனுக்கு 'நர் லெழுத்து படிச்சுக்கொடுத்து உத்தியோகம் பார்க்கும் படி செய்விக்கவேனும் என ஆசைப்பட்டு, திண்ணைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.
பக்கம்:முல்லை கதைகள்.pdf/134
Appearance