பக்கம்:முல்லை கதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 குழந்தையும் சோற்று முட்டையுடன் புஸ்தகச் சுமையை யும் தாங்கி பாளையங்கால் கரை மேலாக கல்வி யாத்திரை செய்துவந்தான். படிப்பு ஏழாவது வரை வந்தது. பையனுக்கும் சாமியாருக்கும் திடீர்ப் புயலாக லடாய் ஏற்பட்டு கிழவரின் நிதானத்தைக் குலைத்தது. இந்தக் காலமும் சாமியார் செய்த பிறமதப் பிரசாரத் தைப்பிரமாதமாகப் பொருட்படுத்தவில்லை. கிருஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றா லும் கிருஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும், அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது மேலும் புண்ணைக் காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிருஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோகூ சாம்ராஜ்யத்தை நம்பும்படி தன் வயிற் றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியசாம் ஒன்றுமில்லை என்றே இவன் நினைத்து வந்தான், அதனால் அவன் இந்தமுயற்சிகளைச் சட்டைசெய்யவில்லை. ஆனால் இது மட்டும் இந்த மகஸ்தாபனத்தில் இல்லை. ஈராயிர வருஷங்களாக மதப்பிாசாரமும் செய்து பழுத்து முதிர்ந்து போன ஒரு ஸ்தாபனத்தின் ஒரு லட்சியமோ கொள் கையோ இல்லாதவர்களும், அல்லது லட்சியத்திலோ கொள்கையிலோ நம்பிச்கையில்லாதவர்களும் பிரமச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க முயலுவதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதும் ரொம். அபாயகரமான விஷயம், தீயுடன் விளையாடுவதாகும். இது மன விகாரங்களில் புகுத்தும் சுழிப்புக்கள் அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்றுவிடாமல் ஸ்தாபன் பலத்திற்கே உலைவைத்து விடுகின்றன. இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத் தியாயர் அர்ச்டெர்னான்ட்ஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அ ழ கு அவருடைய நேர்மைற்ற காம விகாரத்திற்கு இலக் கர்கியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/136&oldid=881476" இலிருந்து மீள்விக்கப்பட்டது