பக்கம்:முல்லை கதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.I34 ரிடம் ஒடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல்போக, சிறு குழந்தைத் தனத்தில் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு பள்ளிக் கூடத்திலிருந்து விரட்டப்பட்டான். தகப்பனுக்கும் மகனுககும். இருவரும் அன்னியோன் னியப் பரிவுகள் நடந்துகொள்ள வசதியளிக்கும் நிர்க்கதி யான நிலைமையிலிருந்தும் மனம் ஒன்றாமல், அந்தஸ்து கொடுத்து வாங்கும் தூரத்தைக் குறைக்காமலே நடந்து வந்ததால், பள்ளிக்கு முழுக்கு போட ஏற்பட்ட காரணத் தைக் கூற என்னால் முடியவில்லை. மதம் மாறச் சொன்னார் முடியாது என்றதால் விரட்டப்பட்டதாக அறிவித்துவிட்டான். தெய்வமாகப் பாவித்து வ ந் த சாமியாரின் ஆசையைப் பூர்த்திசெய்துவிட்டால்தான் என்ன எந்த மதத்து மோட்சமானால் என்ன என்றே. கிழவருக்குப்பட்டது. மேலும் ஹிந்து தர்மம், தாழ்ந்த வகுப்புக்கள் பொட்டுக்கட்டி தன் விசேஷ பரிவைக் காட்டிவரும் சில வகுப்பின் ஆசாரங்கள் மாமிச உணவை விலக்கி வைக்காதிருப்பதால், இவ்வகுப்புக்களிலிருந்து பிற மதங்களுக்குப் போகிறவர்களுக்கும் அவர்களுக்கு மிடையில் தொடர்பு அவ்வளவாக அறுந்துவிடுவதில்லை. அதனால் கோனாருக்குப் பையன் செய்தவேலை பிடிக்கவு மில்லை;புரியவுமில்லை. இருந்தாலும் அவனைக் கண்டிக்க விலலை. வேறு பள்ளியில் சேர்க்க முயலவுமில்லை. இந்த நிலையிலே இசக்கிமுத்தின் மனவுலகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதாவது அவன் தன்னை அறிந்து கொண்டான். ஒரு நாள் ஏனோ தானோ என்று வில்லுப் பாட்டின் ஆவேசத்திற்கு இணங்க அவன் கக்கிய வார்த் தைகள் இத்தனை நாட்களாக ஊமைக் கவிஞனாக அனுபவித்து வந்த இன்பங்களை எல்லாம் இசையில் கொட்டினான். சில சமயங்களில் பிரமிக்கும் இசைக் கனவுகளை எழுப்பியது. ஆனால் பல வார்த்தைப் படாடோப இடிமுழக்கங்கள், கனவைச் சிதைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/137&oldid=881477" இலிருந்து மீள்விக்கப்பட்டது