பக்கம்:முல்லை கதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I35 கரகரப்புகளுடன் பிறந்தன வென்றாலும் பொதுவாக, முறையாகத் தமிழ் படிப்பது என்ற சம்பிரதாயத்தால் ருசி கெட்டுப்போகாததினால் பாட்டில் உண்மையும் தெளிவும் தொனித்தது. ஆனால் புராதனச் செல்வங்களில் தொடர் பும் பரிச்சயமும் இல்லாததினால் நெஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு பிறந்தவுடன் தெரு வழியாக கோஷமிட்டுக்கொண்டு ஒடும் குழந்தையின் அசாதாரணத் தன்மையைப் பெற்றிருந்தது ஆனால் இசக்கிமுத்தின் பாட்டு, இசக்கிமுத்தின் வெளிவராத ரகசியமாக இருந்து வந்தது. இப்படியாக மனக்கனவுகளைப் பாடுவதும் கிறுக்கு வதும் கிழிப்பதுமாகக் காலங்கழித்தான் இசக்கிமுத்து. 2 ரூபமற்ற, நாமமற்ற, அனாதியான பொருளற்ற, பொருளுக்கு அப்பாற்பட்ட அந்த வஸ்து அதாவது, வஸ்து என்ற வரம்புக்கு மீறியதும். வரம்பே இடிந்தது மான ஏதோ ஒன்று என்ற ஒன்றல்லாத, பலவும் அல்லாத அந்த 'அது' சிந்திக்க ஆரம்பித்தது ; தன்னை உணர ஆரம்பித்தது; தன்னை உணர்ந்து தன்னையே உணரவும் அஞ்ச ஆரம்பித்தது. பூர்த்தியாகாத ஆசைவித்துக்கள் மாதிரி கொடுமையின் குரூரத்தின் தன்மைகள் தன் சித்த சாகரத்தின் அடியில் அமுங்கியும் குமிழிவிட்டு. பிரபஞ்சம் என்ற தன்னையே கண்டு அஞ்சியது. தன்னையே நோக் கியது. தானான மனிதர்கள் தன்னுள் ஆன மனிதர்கள், தன்னைக் கையெடுத்து வணங்கி தன்மீதே இலட்சியங் களைச் சுமத்தி, நன்மை நலம் மோட்சம் என்ற கோவில் களைக் கட்டுவது கண்டு கண்ணிர்விட்டது. அவர்கள் நம்புவதுதான் அல்ல என்று அவர்களிடம் அறிவிக்க விரும்பியது, துடிதுடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/138&oldid=881478" இலிருந்து மீள்விக்கப்பட்டது