138 என்னவோ மனித ஜீவனுக்கு உள்ள விசேஷ வசதிகளை யும் சக்திகளையும் நம்மால் அறிய முடியாது. - இசக்கிமுத்து அவளை மன்னிக்கும் மனப்பண்பு படைத்திருந்தான்; நபும்சகத்தால் விளையும் சகிப்புத் தன்மையல்ல; பரிபூரண மன்னிப்பு ஆனால் மனம் அறுந்து தொங்கியது. கொழுந்து விடாவிட்டாலும் கங்கு அவியவில்லை. சில சமயம் சித்தம் அளந்து கட்ட முடியாத விபரீத அளவுக்கு மனம் ப்ேபுருக் கொண்டு குமுறியது. தன்னையே தின்று தணிந்தது. மனசின் குதியாட்டத்தைக் கண்டு அஞ்சிய இசக்கி முத்து அதன் கடிவாளம் தன் கைக்குச் சிக்கும்படி பண் படுத்த லயக்குறைவு இல்லாததால் இசை எழுப்ப விரும் பினான். பாட்டு உண்மையில் துடிதுடிப்புடன் பொங்கி யது. வார்ப்பில் பரிபூரண அழகு முன்போல அனாயாச மாக விழவில்லை. கற்பனையில் கைப்பு தட்டியது. கனவை ஏமாற்றம் ஏந்தி நின்றது. நிராகரித்தான். கலைவாணியின் வழி சிருஷ்டியின் வழி என்பதை உணர்ந்து அறிந்தவன் அறிந்து உணர முயன்றவன் அல்ல. மனப்பண்புதான் கவிதையின் மார்க்கம் எனக் கண்டான். மனிதனுடைய பரிபூரண லட்சியமான தெய்வக் கனவில் மனசை லயிக்கவிட்டால்தான் பாட்டில் பண்பு பிறக்கும் என நினைத்தான். லட்சுமியை விட்டுப் புறப்பட்டான். சமூகத்தை மறந்து வெளிப்பட்டான். மன லட்சியத்தின் பூத உருவமான ஹிமயத்தை நோக்கினான். நடந்தான்.
பக்கம்:முல்லை கதைகள்.pdf/141
Appearance