பக்கம்:முல்லை கதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 5 அந்த அது மனித உருவம்கொண்டு, மனிதன் நினைக்கும் தான், தானல்ல என மனிதனிடம் பறை யடித்து அறிவித்து, தன் சுமையை இறக்கிக்கொள்ள விரும்பியது. மனித உருக்கொண்டது. தாடியும் மீசையும் நரைத்துப் பழுத்த கிழவனாராக உருவெடுத்தது. ஹிமயத்தில் காலடி வைத்தது. நடந்தது. ரூபத்திலே தெளிவு இருப்பதை உணர்ந்தது. தன்மீது சுமை இல்லையோ எனக்கூட சந்தேகித்தது. ஆனால் பொறுப்பை மறந்துவிடவில்லை. ஏனென்றால் அதனால் அதை மறக்க முடியவில்லை. مه ه مهم لتبغ قارةB سg6 L நடந்து வந்தது. இசக்கிமுத்தும் நடந்து வருகிறான். அவன் முகத்தை தாடியும் சிகையும் மறைத்தது. ஆனால் மனக்கொதிப்பின் புகை மண்டலம்போல் முகத்தைச் சுற்றிச் சிதறிப் பறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/142&oldid=881483" இலிருந்து மீள்விக்கப்பட்டது