பக்கம்:முல்லை கதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம்! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கோடை நாளின் மின்னல்போல் அவள் நெஞ்சில் புதியதோர் எண்ணம் தோன்றிற்று இடதுகைக் கடிவாளத்தை அசைத்தாள். குதிரை செங்குன்று நோக்கிப் பறந்தது. தோழிகளும் தம் குதிரைகளை அதே பாதை நோக்கித் துரத்தினார்கள். செல்வியும் தோழிமாரும் செங்குன்றை யடுத்துள்ள கண்ணிச் சோலையை அன்டந்தார்கள். தமது குதிரை களை நாவல் மரம் ஒன்றில் கட்டினார்கள். அழகாய் அமைந்த அச்சோலையில் நுழைந்தார்கள், மருளும் பார்வையுடைய மான்கள்போல, உடுக்கள் நிரம்பிய நீலவானம்போல் பச்சைத் தழை கள் அளாவிய மரங்களில் மலர்கள் குலுங்கின. எங்கனும் கொடிப் பூக்கள், புதர்ப்பூக்கள் தரையில் அழகு கொழித்தன, பூஞ்செடிகளின் கால்களை நோக்கி மடை கோலிவிட்ட தண்ணீர் சாரை சாரையாய் ஒடிக்கொண்டி ருந்தது. அமைதியில் ஊடுருவிப் பாய்ந்தது பறவைகளின் இன்னிசை. புதுப்பெண்கள் போல் ஒரு சாயலாக மயில் கள் ஒதுங்கி ஒதுங்கி நடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/144&oldid=881485" இலிருந்து மீள்விக்கப்பட்டது