பக்கம்:முல்லை கதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தாளாதலால் சற்று நிமிர்ந்து புன்சிரிப்புடன் அவனுடைய முகத்தை மற்றொரு முறை பார்த்தாள். அவனும் அவன் முகத்திற் சிந்தும் அழகைத் தன் பார்வையால் ஏந்தினான். அவள் வாடை யுயர்ந்த மங்கை மிதமிஞ்சிய பரும னில்லாத மின்னற் சுரம்பொன்ற மேனியுடையவள் : மெல்லிய கருங்குழலின் பின்னல், பின்னால் நீண்டு தொங் கிற்று கருநாகம்போல் நிலவுபோல் வெண்ணிறத்தையும், நிழல்போல் மேன்மையையும் உடைய, அவளது ஆடை யான்து மேனியின் ஒளியை மறைத்துவிட முடியவில்லை. பிறைபோன்ற நெற்றி, கருவிழி, செவ்விதழ், முல்லைப்பல் ஆகிய இவைகள், வேண்டுமென்று சிரிப்பதன்றி இயற்கை யாக நகைப்பைக் கொட்டிக் கொண்டிருந்தன. ஆயினும் அவன் அவள் பகை அரசனின் மகள்' என்பதை எண்ணினான். தன் நெஞ்சையும் உயிரை யும் அளாவிய அந்த அழகை வலிய வெளியே இழுத்துப் போட்டான்? வாய் நிறைந்த அமுதத்தை வேண்டு மென்றே கீழே உகுத்தான்; உடல் சிலிர்க்க வந்த தென்றலை விட்டு வெதுப்பும் அறையில் குடிபோக முன்றான். அந்த அழகின் ஒளி புக வேண்டாம் என்று தன் கண்ணை இமையாமல் மூடினான். அவள் வாய் மலரின் செந்தமிழ்த்தேன் வந்து பாயாமல் தன் காசுக்கக் தாழிட்டான். என்னை நீங்கள் ஒப்புகிறீர்களா?-என்று அவள் ஆற்ற முடியாத காதல் தாண்டக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/147&oldid=881489" இலிருந்து மீள்விக்கப்பட்டது