145 செல்வியே, ஒன்றை ஒன்று தழுவும் நமது இரண்டு உள்ளத்தை, நம்மிரு நாட்டின் பழம் பகையானது பிரிக் கிறது. என் அன்னை நாட்டில் ஒருத்தி யிருக்கிறாள். அவள் உன்னினும் அழகுடையவள் அல்ல எனினும் அவள் என் பகையரசனின் மகளல்ல..என்று கூறி மறுத்தான். இதைக் கேட்ட செல்வி உள்ளந் துடித்தாள். பகை யுள்ளத்தைத் தாண்டி அவனுடைய அன்பைத் தன்னிடம் ஓடிவரும்படி செய்ய அவளால் முடியாமற் போயிற்று. "என் உள்ளத்தில் குடிபுகுந்தவரின் பெயர் என்ன? அதையாவது கூறலாமா? என்று பரிதாபமாகக் கேட் டாள். இளவரசன் தன் பெயரைச் சொன்னான் வேல் மறவன்' என்று. உள்ளம் ஒடிந்த செல்வி தன் உயிரைச் சுமந்து கொண்டு தள்ளாடி நடந்தாள். செல்வி தன் தோழிமாரு டன் தன் மாளிகை சென்றாள். அவனையே நினைத்திருந் தாள் மணித்துளிதோறும். ஒரு நாள் போவது அவளுக்கு ஒர் யுகம் போவதாயிருந்தது. இவ்வாறு கழிந்த நாட்கள் அவள் கணக்குபடி வருடங்கள் ஆயின. வேல்மறவன் தாய் நாடாகிய செங்குன்றுாருக்கும் செல்வியின் தாயக மாகிய கேணிச்சுரையருக்கும் சண்டை மூண்டது. கேணிச்சுரையூரின் கோட்டை வாசலைக்கடந்து எதிர்ப்படை அரசமாளிகையை முற்றுகையிட்டு விட்டது. கேணிச்சுரையூரின் காக்கைக் கொடி பிடிபடும் என்று இரு பக்கத்தாறும் உறுதியாக்கலானார்கள். கேணிச் சுரையூரின்
பக்கம்:முல்லை கதைகள்.pdf/148
Appearance