பக்கம்:முல்லை கதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கவிஞர்கள் தமது தாய்நாட்டின் பெருமையைக்காக்க அந்நாட்டு இளைஞருக்கு எழுச்சியை - உணர்ச்சியைத் தூண்டினார்கள். ஆனால் அந்த நாட்டுப் பெண்கள் போரிற் கலந்துகொள்ளக் கூடாது என்பது அந்நாட்டின் சட்டமாதலால் பெண்களின் எழுச்சி அடைந்த தோள்கள் அடக்கப்பட்டன. கேணிச் சுரையூரில் வயதுவந்த இளைஞர் அனைவரும் போர்க்கோலம் பூண்டார்கள். இனத் தெரியாத இளைஞன் ஒருவன் கேணிச் சுரையூரின் படைக்குத் தலைமை தாங்கலானான். அரசமாளிகையை முற்றுகை யிட்டிருந்த செங்குன் றுார்ப் படையில் இனந்தெரியாத அந்தச் சிங்க இளைஞன் சிறுபடை ஒன்றுடன் புகுந்தான்! செங்குன்றுார்ப் படை சிதறி ஒடிற்று! அது கோட்டை வாசலுக்கு வெகு தூரத், தில் அமைந்திருந்த தன் கூடாரத்தை நோக்கிப் பறந்தது. கேணிச் சுரையூர். அரசன் மகிழ்ந்து, கூடாரத்தை நோக்கி ஓடிய எதிரிகட்குப் பெண்ணுடைகளைக் கழுதை மேல் அனுப்பினான். கோட்டை வாசல் கடந்து உள் நுழைந்த பகைவர் திருப்பியடிக்கப்பட்டால் அவர்கள் எதிரிகளால் தரப்படும் பெண்ணுடைகளை அணிந்துதான் மீண்டும் போர் செய்யவேண்டும் என்பது இரு நாட்டைப் பொறுத்த கட்டளை. செங்குன்றுாாப் படைக்குத் தலைமை வகித்திருந்த வேல் மறவன் கழுதை தூக்கிவந்த பெண்ணுடைகளை வெட்கத்தோடு உடுத்துக் கொண்டான். மீண்டும் போர்க்களத்தில் இரு பக்கத்துப் போர் முரசு களும் போரை ஆரம்பித்தன. உறவென்பதில்லை. நண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/149&oldid=881491" இலிருந்து மீள்விக்கப்பட்டது