பக்கம்:முல்லை கதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 பென்பதில்லை. தம் தம் தாய்நாட்டின் வெற்றி ஒன்றே. குறியாகக் கொண்டு போர் செய்தார்கள். தலைகள் பனங்குலை சரிவது. போல் சரிந்தன. போர் வீரர்கள் ஒருவர் க்கொருவர் விழுக்காடு நி ன் று வாட்போர் ந்டத்தினார்கள். - இனந் தெரியாத அந்தப் படை வீரனை நோக்கி: "அதோ நாணத்தால் முகம் மறையும்படி பெண்ணுடை யால் மூடி நிற்கும் அந்த வீரன் தான் பகைப் படைக்குத் தலைவன்' என்று கூறினான் ஒரு வேவுகாரன். இனத் தெரியாத அப்படைத் தலைவன் அவன் மேற் பாய்ந்தான்! இரு தலைவர்க்கும் வாட்போர் மூண்டது. விரைந்து சுழலும் இரு வாள்களும் மின்னல் ஒளியை உண்டர்க்கின. போர்க் கலையின் நுட்பத்தை, மற்ற வீரர்கள் உற்றுக் கவனிக்கலானார்கள், தம் தம் போர்த் தொழிலையும் மறந்து அவர்கள் தம் தலைவர்களின் வெற்றி தோல்வியை எதிர் பார்ப்பதையும் மறந்துபோனார்கள், போர்த் திறமை வெகுநேரம் நீடிப்பதால் கலை நுட்பம் தமக்குப் புரியும் என்று நினைத்தார்கள். முடிவில், வாட்போர் செய்திருந்த அந்த இருதலைவர்களின் இரு மார்பிலும் ஒத்தகாலத்தில் இரண்டு வாள் முனைகள் நுழைந்து வெளி வந்தன. அதனால் இருவர் தோள்களும் தாழ்ந்தன. இரு மார்புகள் குருதியை உகுத்தன. கடை சாய்ந்து விழும் இரு தேர்கள்போல் இரு தலைவரும் ஒரு முகமாகச் சாய்ந்தனர். இருவர் உடைகளும் இடம்விட்டு நகர்ந்தன. இருவர் கண்களும் சந்தித்தன. கழுத்தளவு கத்தரித்து விட்ட சிகை. மேலேறிய நாகம்போன்ற பின்னல்1 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/150&oldid=881493" இலிருந்து மீள்விக்கப்பட்டது