பக்கம்:முல்லை கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இப்படியெல்லாம் அனுபவமுள்ள ஒரு மனிதன், சர்வ சூன்யமாகத் தன்னை இகழ்ந்து கொள்ளுவார் என்று: தான் நினைக்கவேயில்லை. வெற்றிலையின் நரம்பைக்கீறி எறிந்தேன். அது பினாமி (காரமில்லாத மெட்ராஸ்) வெற்றிலை. வெறுப்புடன் சுண்ணாம்பைத் தடவினேன். சுவரில் சுரண்டியெடுத்தது போல, உருண்டு உருண்டு வெற்றி லையை ஒட்டைபோட்டது, இந்த சம்பிரமத்தில் களிப் பாக்கு. அதற்கு மேலாக முகப்பவுடர், செண்டு இவை களில் நம்பிக்கை வைத்து ஆ ட் க ைள மயக்கிவரும் விபசாரிக்கு உதாரணம் போன்ற புகையிலை. இவை போதா தென்பது போல, பூரீமான் வெங்கு ராவைத் தெரியுமா, கவர்னர் ஸ்பெஷல் வெடிகுண்டு வழக்குக் கைதி; பெல்லாரி ஜெயிலிலே, தனி வார்டில் போட்டு அடித்தார்களே. ஒகோ, அப்பொழுது உங்களை திருச்சி ஜெயிலுக்கு மாற்றிவிட்டார்களோ,-வீரன்னா வீரன் தான் சார்-என்ன வேலைகளெல்லாம் பண்ணி யிருக்கான் தெரியுமோ......" அவரைப் பார்க்க உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமே? பாவிப்பயல்கள் என்னை மாத்திப் போட்டானே!, என்று பரிதவித்தார் புரட்சி மோகன லா கிரியில் சிக்கிய என் நண்பர்...... மூவ்மெண்ட் டயம்லே என்ன செய்தார் தெரியுமா... செப்டம்பர் நடுராத்திரி ரூம்லே டார்ச்கூட இல்லை'... வெளியிலே சடபுட என்று கதவு தட்ற சப்தம் கேட்டது,என்ன செய்தார் தெரியுமா?’ என்று ஒரு ஆணித்தரமான கேள்வி போட்டார். தெரியாது; அதற்கப்புறம்' என்றேன் நான். அரிச்சந்திரன் மயான காண்டத்தில் ஊன்றிக் கொண்டு நிற்கவேண்டிய தடி சடக்கென்று ஒடிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/20&oldid=881500" இலிருந்து மீள்விக்கப்பட்டது