பக்கம்:முல்லை கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டு செய்யும் திருக்கூட்டம் கா. ரீ. ரீ. அப்படிப் பார்க்கப்போனால் இந்த உலகமே தொண்டு செய்யும் நிலைத்தான். இந்த உலகம் எதற்காக இருக்கிறது? தொண்டுக்காக, உலகத்தில் பிராணிகள் எதற்கு வாழ்கின்றன: தொண்டு செய்வதற்காக, பிராணி கள் இல்லாவிட்டாலும் உலகம் இருக்கும்: ஆனால் தொண்டு இல்லாவிட்டால் பிராணிகள் ஒருவேளை இருந் தாலும் கூட, உலகம் இராது. இதோ இந்த மின்சார விளக்கின் வெளிச்சத்திலே நான் எழுதுகிறேன். எனக்குத் தெரியாத எத்தனையோ பேர் சேர்ந்த ஒரு சமூகத்தின் தொண்டினால் இந்த வெளிச்சம் எனக்குக் கிடைக்கிறது. இதே மின்சார விளக்கு, திடீரென்று அணைந்து போகிறது. எங்கும் ஒரே இருட்டு ரிப்பேர் முடிந்து மறுப்டி வெளிச்சம் வர இன்னும் ஒரு மணிநேரம் பிடிக்கும். அதுவரையில் என் மனைவி விளக்கைக் கொண்டு வருகிறாள். என் கை எனக்காக இந்தக் கட்டுரையை எழுதுகிறது. இப்படியாக எனக்குச் சமூகம் தொண்டு செய்கிறது: குடும்பம் தொண்டு செய்கிறது: எனக்கு நானே தொண்டு செய்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/25&oldid=881514" இலிருந்து மீள்விக்கப்பட்டது