பக்கம்:முல்லை கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எனக்கு நானே தொண்டு செய்வது எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது அதைப் பற்றிக் கேள்வி கேட்கும் போது, "ஆம், உனக்கு நீ தொண்டு செய்கிறாய்' என்ற பதிலும் என்னுள்ளிருந்து கிடைக்கிறது. குடும்பத் தொண்டும் புரிகிறது, பிரம்மச்சாரியாக இருந்தால் ஒரு குடும்பத்துக்குத் தொண்டு செய்யலாம்;. மணம் செய்து கொண்டாலோ பல குடும்பங்களுக்குச் சேவை புரியலாம்! "நான் குடும்பத்துக்குத் தொண்டு செய்கிறேனா?' என்று கேட்கும்போது, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும், "கட்டாயம் உன் தொண்டு இல்லாவிட்டால் எங்கள் கதி என்ன?’ என்கிறார். ஆனால் நான் சமூகத்துக்கு ஊழியம் செய்கிறேனா என்பது எனக்குத் தெரியவில்லை. 'சமுகத்துக்கு நான் ஏதாவது தொண்டு செய்திருக் றேனா?' என்று நடுத்தெருவில் நின்று கொண்டு தான் கேட்கிறேன், தெருவில் எத்தனையோ பேர் குறுக்கும் நெடுக்கும் போகிறார்கள், வருகிறார்கள்; வண்டிகளில் அமர்ந்து ஒடுகிறார்கள். எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்து வேடிக்கை பார்ப்பவர்கள் சிலரும் இல்லாம லில்லை. ஆனால் என் கேள்விக்குப் பதில் என்ன? நான் கேள்வியை விடவில்லை, .ே க ட் டு க் .ெ க | ண் ேட இருக்கிறேன். ஒரு பெரியவர், எங்கோ அவசரமாய்ப் போன்வர், என் கேள்வியைக் கேட்டதும் சடக்கென்று, பிரேக் போட்ட வண்டிபோல நிற்கிறார். 'ஐயா, சமூகத்துக்காக நீங்கள் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. அப்படிச் செய்திருந்தால் இத்தனை பேரிலே யாராவது ஒருவர் உமக்குப் பதில் சொல்லியிருப்பார்' என்கிறார். 'அதுதான் நீங்கள் பதில் சொல்லுகிறீர்களே!' அவர் ஒரு கணம் திகைத்து நிற்கிறார். உடனே சமாளித்துக் கொண்டு, உங்களுக்கு மூளை இருக்கிறது!" என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/26&oldid=881516" இலிருந்து மீள்விக்கப்பட்டது