பக்கம்:முல்லை கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 "மூளை யாருக்கு இல்லை. இதோ போகிற இத்தனை பேருக்கும் இருக்கிறது.” "அதைப்பற்றியெல்லாம். நான் சொல்லத் தயாராக இல்லை. நான் உங்களைக் கேட்பது ஒரே கேள்வி: சமூகத்துக்குத் தொண்டு செய்ய உங்களுக்கு விருப்பமா?" கேட்பானேன்? சமூகம் எனக்குத் தொண்டு செய்யும் போது-செய்வதை நேரில் காணும்போது, நான் மட்டும் எப்படி அதற்குத் தொண்டு செய்யாமல் இருக்கமுடியும்? நான் ஏற்கனவே அப்படி ஏதோ செய்துகொண்டிருப்ப தாகத்தான் நினைக்கிறேன்." "அதுதான் தப்பு, சமூகத்தொண்டு செய்யவேண்டு மானால் அதற்குச் சில நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சேரவேண்டும். சமூக சேவை என்றால் அதில் எத்தனையோ விதங்கள் இருக் கின்றன. நீங்கள் எந்த விதமான ஊழியம் செய்ய விரும்பு கிறீர்கள் என்பதை முதலிலேயே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதோ எங்கள் நிலையமே ஒன்று இருக்கிறது. அதில் வேண்டுமானாலும் நீங்கள் சேரலாம். நான்தான் அதன் காரியதரிசி. அட! ஒரு சமூக ஸ்தாபனத்தின் காரியதரிசியா இவ்வளவு நேரம் என்னோடு, பேசிக் கொண்டிருக்கிறார்! எளிதாகக் கிடைக்கும் சந்தர்ப்பமா இது? "சரி; உங்கள் நிலையத்தில் கட்டாயம் சேருகிறேன். அதில் எந்தவிதமான தொண்டு நடக்கிறது?' என்றேன். காரியதரிசி விளக்கெண்ணெய் குடித்தவர்போல முகத்தைக் கடுத்துக் கொள்கிறார். பிறகு, என்னை எப்படியாவது கடைத்தேற்றவேண்டும் என்ற பெரு நோக்கத்தோடு என் அறியாமைக்கு இரங்கியவராய், 'உங்கள் பேச்சு எனக்கு அடியோடு பிடிக்கவில்லை. முதலில் நம்முடைய நிலையம்' என்று நீங்கள் சொல்ல வேண்டும். என்ன தொண்டு நடக்கிறதென்பதை விவரிக் மு. க.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/27&oldid=881518" இலிருந்து மீள்விக்கப்பட்டது