பக்கம்:முல்லை கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கன்னியப்பன் வேலையாட்களின் தலைவன். ஏழாவது வயதில் இந்த நிலையத்துக்கு வந்தவன். இங்கே வேலை செய்து இப்போது தலை நரைத்துப் போனவன். இவர் எம்மாம் மட்டும்! அட. இவரெ போல எத்தினியோ அதிகாரிங்களெ நானு கண்ணுலெ வெரலெ விட்டு ஆட்டி ருக்கேன். இது நேத்துப் பொறந்த பிள்ளே!” என்று பேசுவான். அவன் குழைந்துகொண்டே வந்து, "என் னாங்க!' என்றான். "இதோ பார். எத்தனை பழகியும் உனக்குச் சிறிதும் மரியாதையே தெரியவில்லை. ஆட்களை அடக்கி வேலையை நடத்திப்போகலாம் உனக்குத்திறமை இல்லை. ஏதோ உன் ஆயுளை இங்கே கழித்த விட்டாய்; உன்னைப் போகச் சொல்லவும் எனக்கு மனமில்லை. வரவர வேலை யாட்களின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. தடியெடுத் தவனெல்லாம் வேட்டைக்காரனாக இருக்கிறான். வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை; ஏதாவது கேட் டால், அங்கே அந்தச் சம்பளம் கொடுக்கறாங்க', 'அவுங்க பண்டு கொடுக்கிறாங்க', 'அங்கே எத்தினி நாளு வீவு கிடைக்குது!’ என்று ஷஹாப் பேசுகிறார்கள். எல்லாம் நீ கொடுக்கும் இடத்தான்-ஒ! ஷண்முக முதலியாரா? வாங்க, வாங்க!-சரி, நீ போய் நான் சொன்ன வேலை களைப் பார்.' - ஐந்து நிமிஷங்களுக்கு அப்புறம் அந்த அதிகாரியை நாம் காணமுடியாது. மறுநாள் மறுபடி எப்பொழுது வருவாரோ! காரியதரிசி ஏதாவது கேட்டால், நிலையத் தின் வேலையாக வெளியே போயிருந்ததாகச் சொல்லு សអ អំ - வேறோர் அதிகாரி, பெரும்பாலும் மாலையில் வேலைக்கு வருவார். அவருடைய இரவுச் சாப்பாடு நிலை யத்தின் கணக்கில்தான். இரவு பத்து மணிவரையில் இருந்துவிட்டு, வீட்டுக்குப் போவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/30&oldid=881525" இலிருந்து மீள்விக்கப்பட்டது