பக்கம்:முல்லை கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காரியதரிசிக்கு ஊரிலுள்ள பெரிய மனிதர்களைத் தெரியும் கார் நம்பர்கள் தெரியும், அவர்களுடைய பணத்தை நிலையத்துக்குக் கொண்டு சேர்க்கத் தெரியும். அதிகாரிகளுக்கு அந்தப் பெரிய மனிதர்களுக்குச் சலாம் போடத் தெரியும்; தமக்குக் கமிஷன் கொடுக்கவல்ல வியா பாரிகளைத் தெரியும்; நிலையத்துக்கு வேலை கொடுக்கும் வாடிக்கைக்காரர்களைத் தெரியும்; வீட்டுக்கு வேண்டிய கறிகாய்கள், நெய், தயிர், பழம் முதலியவை கொண்டு வரும் வேலையாட்களைத் தெரியும், வேலையாட்களுக்கு வேலை தெரியும்; வீட்டிலே போட்டதை ருசி பாா க்கா மலே சாப்பிடத் தெரியும்; மறுநாள் சோற்றுக்கு வழி இல்லை என்றால் முணுமுணுக்கத் தெரியும்; காரசாரமாக மேலதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் எழுதத் தெரிந்த சில வெளி மனிதர்களைத் தெரியும். நான் இப்பொழுது இந்த நிலையத்தின் தொண்டன். இந்த நிலையத்துக்கு ஒரு தனி அடையாளம் உண்டு. அதை என் சட்டையில் மாட்டிக்கொண்டுதான் நான் வெளியே போகவேண்டும். வழியில் என்னைப் பார் ச்கிற வர்கள் நமக்குள்ளே, அவர் எந்த நிலையத்லைச் சேர்ந் வர்?' என்று கேட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் கேள்வி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்னை அவர்கள் சமூகத்தொண்டன் என்று ஏற்றுக்கொண்டதற்கு இது அறிகுறி. தனியே நான் என்ன செய்தாலும் அது வெறும் தொண்டாக இருக்கலாம்; இதுதான் சமூகத் தொண்டு. தனியே இருந்தபொழுது நான் செய்த வேலைகள் எனக்குத் தெரிந்தன; இப்போது நான் என்ன செய்கிறேன். என்பது எனக்கே தெரியவில்லை. இருந்தாலும், இதுதான் சமூகத் தொண்டு. 'நான் சமூகத் தொண்டு செய் கிறேனா?' என்று இப்பொழுது நான் கேள்வி கேட்கத் தேவையே இல்லை. அதோ ஒரு தொண்டர்.போகிறார்” என்று மக்கள் சொல்லுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/32&oldid=881529" இலிருந்து மீள்விக்கப்பட்டது