பக்கம்:முல்லை கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 இந்த நிலையத்தில் நான் நான்கு வருஷங்களாக வேலை செய்கிறேன், என் மூளை நாளுக்கு நாள் மழுங்கு கிறது புதிதாக எந்த வேலையும் கற்றுக்கொள்ளவில்லை. தெரிந்த வேலையிலும் வேகம் குறைகிறது. அதிகாரிகள் மூளைதான் என் மூளை. அவர்கள் சொல்வதைத்தான். நான் செய்யவேண்டும். நானாக ஏதாவது செய்தாலும், அது அவர்களுக்குப் பிடித்திருக்கவேண்டும்? அவர்களுக்குப் பிடிக்காவிட்டால், பிடிக்கும்படியாக மறுபடி அந்த வேலையை மாற்றவேண்டும். இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை; ஏனெனில் என்னிடம் இன்னும் கொஞ்சம் மூளை இருக்கிறது. எனவே வேறொரு நிலையத்துக்குப் போகிறேன். நான் எங்கே போனாலும் இந்த அவதி என்னோடு கூடவே வருகிறது அந்த நிலையத்திலும் இதே கதை மறுபடி வேறு நிலையம் இப்படி ஏழு நிலையங்களில் மாறி மாறி எழுபிறப்பிலும் தெரிந்து கொள்ள முடியாத விஷய மாகிய தொண்டு என்ற விஷயத்தை நான் ஓரளவு அறிந்து கொள்கிறேன். இப்பொழுதும் நான் தொண்டன்' தான். ', அப்படியானால் தொண்டு என்பது என்ன? நீங்கள் எந்த வகையான தொண்டு செய்கிறீர்கள்?' என்று நீங்கள் கேட்கிறீர்கள். தொண்டு என்பது ஒரு பெரிய ரகசியம். அது ஒர் ஆள் அல்ல, கோபுரம் அல்ல, மிட்டாய்க்கடை அல்ல, உங்க ளுக்கு வர்ணித்துச் சொல்வதற்கு அதிலும், நடுத்தெரு விலே நான் அதைப்பற்றி அதிகமாகச் சொல்லக்கூடாது. தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அக்கறை இருந்தால், நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள்? தொண்டுசெய்யும் எங்கள் நிலைத்துக்கு வராதீர்கள். விட்டுக்கு எப்பொழுது வரலாம்?' என்று கேட் கிறீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/33&oldid=881531" இலிருந்து மீள்விக்கப்பட்டது