பக்கம்:முல்லை கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அது எப்படிச் சொல்ல முடியும்? நான் ஒரு தொண் டன்; தொண்டு செய்யும் ஒரு நிலையத்தில் இருக்கிறேன்நிலையத்தின் மூளைதான் என் மூளை. நிலையம் எப் பொழுது கூட்பிட்டாலும். எதைச்செய்யச் சொன்னா அலும் - அது எனக்குத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டா லும் சரி; எனக்குச் சொந்த வேலைகள் இருந்தாலும் சரி: இல்லாவிட்ட்ாலும் சரி, நான் தயாராகக் காத்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு என்ன பதில் சொல்வது? உங்சளுக்கு எப்படித் தோன்றுகிறதோ செய்யுங்கள். இதோ, ஒர் ஆள் வருகிறான், எங்கள் நிலையத்திலிருந்து. உங்களோடு அப்புறம் பேசுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/34&oldid=881532" இலிருந்து மீள்விக்கப்பட்டது