பக்கம்:முல்லை கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அந்தக் கருமுகில்தான் எவ்வளவு அழகு! அதிலே பளிச்சென்று ஒளிவீசும் அந்த மின்னல்-அது தெய்வீகக் காட்சி! - வெண்முகில் ஏமாற்றத்தோடு தன்னைப்பார்த்துக் கொண்டது. மின்னலில் லேசான தோற்றங்கூட அதனிடம் தென்பட வில்லை. - அது ஆவலோடு மேலே பார்த்தது. விரைவிலேயே தான் விண்ணுலகில் நுழையப்போகும் மகிழ்ச்சியில், கருமுகிலிற்றோன்றிய அந்தத் தெய்வீக ஒளியை அது மறந்துவிட்டது. - - சிறிது நேரத்திற்கெல்லாம் அது திரும்பிக் கீழே பார்த்தது. - - கருமுகில் எங்குமே தென்படவில்லை. பூமிமட்டும் ஸ்நான அறையிலிருந்து வெளிவரும் இளம் பெண்ணைப் போல தோன்றியது. மரங்களில் வளைந்த கொடிகள் கிசுகிசு மூட்டிய குழந்தைகளைப் போல நகைத்தன. பறவைகள் மரக் கிளைகளில் உட்கார்ந்து தங்கள் உடலைச் சிலிர்த்துக் கொண்டன. . வெண்முகில் சொர்க்க வாசலுக்கே போய்ச் சேர்ந் தது. தான் உள்ளே சுலபமாகப் போய்விடலாம் என்று அது எண்ணியிருந்தது. ஆனால் காவலாளி அதை உள்ளே நுழைய விட வில்லை. - . 'உள்ளே ஒரே ஒர் இடந்தான் காலியாக இருந்தது. இப்பொழுது அது நிரம்பிவிட்டது' என்று அவன் சொன்னான். - - தன் பின்னால் வந்த பல வெண்முகில்களை இந்த :வெண் முகில் வழியில் பார்த்திருந்தது. அது நினைவிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/36&oldid=881536" இலிருந்து மீள்விக்கப்பட்டது