பக்கம்:முல்லை கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரை மனிதன் எம். வி. வெங்கட்ராம் "எவ்வளவுதான் மேற்கத்தி மோஸ்தருக்குள் உடம்பைத் திணித்துக் கொண்டாலும் அசல் மேற்கத் தியானுக்கு உள்ள கம்பீரமோ கேர்த்தியோ உண்டாகப் போவதில்லை... "ஆனால் பிறந்துவிட்டோம். இப்படி, இந்த நிறத்துடன் இந்த காட்டில் எப்படியாவது வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான். குறைந்த பட்சம் மேற்கு முறையில் எங்களை உயர்த்திக்கொள்ள முயற்சி யாவது செய்யவேண்டியது பொறுப்பு, கடன்...' -இந்தச் சிறுமைப் பித்து அவன் ஒருவனுக்கு மட்டுந்தானா? நம் நெஞ்சில் நாமும் கைவைத்துப் பார்க்க வேண்டாமா? மிதமான குடியால் உண்டான மிதமிஞ்சிய உற்சாகத் துடன் வெளிவந்தபோது, மழை முரட்டுத்தனமாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. நனையாமல் காத்துக் கொள்ள நான் மழைக்கோட்டும் கொண்டுவரவில்லை. எங்காவது தங்கி இரவைக் கழிக்கலாம் என்றால், துணை யில்லாத் துர்க்கத்தில் இனிமை ஏது? உடலையும் மூளையை யும் ஒட்டிக்கொண்டிருந்த உற்சாகத்தைச் சேதமாக்காமல் அழகாக நனைந்துகொண்டே ரயில்வே ஷ்டேஷனுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/38&oldid=881541" இலிருந்து மீள்விக்கப்பட்டது