பக்கம்:முல்லை கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? சென்றுவிடுவதே நலம் என்று நிச்சயித்து,கால் சட்டையை முழங்கால்கன் வரை மடித்துவிட்டுக்கொண்டு புறப் பட்டேன். மழையில் நனைந்துகொண்டே இரவில் தனியாக நடத்து செல்லுவதிலும் இன்பம் இருக்கிறதல்லவா? அந்த இன்பத்தை சீட்டி அடித்து அனுபவித்துக்கொண்டே ஸ்டேஷனுக்கு விரைந்தேன், பிளாட்டாரத்தில் நின்றது ரயில்; புறப்படுவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நிமிஷங்கள் தான் பாக்கி அவசர அவரமாய் செகன்ட்கிளாஸ்" டிக்கட் ஒன்று வாங்கிக்கொண்டு சேற்றை வாரி இறைக் கும் பூட்கள் கால்வாகிவிடாதபடி ஒடி. ஒரு 'செகன்ட்.கிளான் வண்டி-நாலுபேர் படுக்கலாம் -ஒரே ஒரு வெள்ளைக்காரனைத் தவிர காலியாகக் கிடந்தது; அவனும் தூங்கிக்கொண்டிருந்தான். கதவைத் தள்ளினேன் உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திறந்து கிடந்த ஜன்னல் வழியாக நான் உள்ளே ஏறிக் குதிக்கவும், ரயில் ஊதவும் சரியாக இருந்தது. முதன்ல் என்னைக் கவனித்துக்கொண்டேன். ஈரி உடைகளைப் பிழிந்தும், தொப்பியை உதறிக்கொண்டும். ‘அப்பாடா...' என்று அலுத்துக்கொண்டே படுத்திருத்த ஆளைக் கவனித்தேன். அவன் அசல் வெள்ளைக்காரன் ! அசல் என்றால் அசல்தான் கருப்பு மனைவிக்கும் வெள்ளைக் கணவனுக்கும் பிறக்கும் அரை ஜாதி அல்ல, நேராக எங்கோ மேற்கு நாட்டிலிருந்து வந்தவன். நல்ல வெள்ளை திறத்தை நீளமாய்ப் பரப்பி நன்றாப் உறங்கிக் கொண்டிருந்தான். வெண்மை படுக்கையில்கூட அழ காகவே இருந்தது. அதிலும் ஆச்சரியம் என்னவெனில். அவன் தன் உடுப்பைக் கழற்றவே இல்லை. கால் சட்டை {பாண்ட்), கோட், பூட்கள், நெக்டை ஏன், மூக்குக் கண் ணாடியைக்கூட அவன் கழற்றவே இல்லை. லேசாக மேலும் கீழும் போய்வரும் மார்பு-ாயிலின் ஆட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/39&oldid=881543" இலிருந்து மீள்விக்கப்பட்டது