பக்கம்:முல்லை கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 யோசனை கூறவேண்டும்? ஒருவேளை-ஒருவேளைமுழுக்க முழுக்க உடையின் கனத்தைக் குறைக்க... சே, வெள்ளையர் காட்டு மிராண்டிகள் அல்ல, சூரியன் எப்படிக் கொதித்தாலும், அவர்கள் உடை குறைக்கமாட்டார்களே... அவர்கள் பேசியதன் பொருள் என்னவென்று புரிய வில்லை. - - ஜன்னலை-கண்ணாடி உள்பட-இறுக மூடி விட்டு ... பிறகு 'கட புட வென்று சிறிது நேரம் கீழே ஏதேதோ சப்தம் கேட்டுக் கொண்டே யிருந்தது. நான் அசையவே இல்லை. இன்னும் சிறிது கழிந்து, கீழே மெளனம் நிலவியது. அவன் என்ன தான் செய்கிறான் என்று பார்க்கத் தோன்றியது; ஒருபுறம் கூச்சமாகவும் இருந்தது. தலையை மட்டும் மெதுவாய்க் கீழே நீட்டிப் பார்த்தேன்: மறு நிமிஷம் "ஐயோ என்று வாய் தொண்டைக்குள் தானாகக் கதற, கைகள் தாமாக ஊன்ற, கால்கள் பாய, மார்பு படபடக்க எழுந்து உட்கார்ந்தேன். அழகாய்ப் படுத்திருந்த வெள்ளைக்காரன் அங்கே இல்லை; அவனுக்குப் பதிலாக தாறுமாறாகவும் கோர மாகவும் வெட்டுண்டது போன்று ஒர் அரை உடல் அங்கே கிடந்த து: நான் எதற்கும் பயந்ததில்லை; ஆனால் இப்போது பயந்துவிட்டேன். உன்னால் பயப்படாமல் இருக்க முடியுமா,கேட்கிறேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஒர் ஆளைத் தனியாகப் பார்க்கிறாய்;ஆனால் திடீரென்று அவன் இருக்கும் இடத்தில் பார்வைக்கே பயங்கரமான அரை உடல் கிடந்தால் பயப்படாமல் இருக்க முடியுமா மு. க.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/43&oldid=881553" இலிருந்து மீள்விக்கப்பட்டது