பக்கம்:முல்லை கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛器 உன்னால்? கண்கட்டு வித்தை நடக்கும் இடம் அல்ல என்பதையும் மறந்துவிடாதே. நீ எப்படி பயந்திருப்பாயோ, நானும் பயந்து விட்டேன். கீழே பர்க்கவும் எனக்குப் பயமாக இருந்தது. சிரித்து பயத்தை விரட்டலாம் என்று நினைத்தால் சிரிப்பும் வாயை இளித்துவிட்டது. ரயிலிலிருந்து இறங்கிவிடலாம் என்றால் அது தலை கிறுகிறுக்கும்படி ஒடிக்கொண்டிருந்தது. அபாயச் சங்கிலியை இழுக்கலாமே என்று நீ சொல்லலாம். ஆனால் அபாய காலத்தில் அந்த நினைப்பே உண்டாவதுதில்லையே! பயம் ஐந்து நிமிஷங்களைச் சாப்பிட்டபின் என்னைத தட்டிக்கொடுத்து சமாளித்து கொண்டேன் உயிராசை ஒருபுறம் இழுக்க, பயம் மறுபுறம் இழுக்க இறுதியில் பயம் சிறிது பின் வாங்கியது. பேய் பிசாசு களைப்பற்றி நான் எப்போதும் நம்பியதில்லை; எப்போ தும், என்று சொல்லுவதில் பொய்க்கலப்பு இருக்கிறது: சிறு வயதில் இருட்டில் கூட போகமாட்டேன். விவரம் அறிந்தபின் நான் பேய் பிசாசுகளை நம்பியதில்லை. அவை ரயில் பிரயாணம் செய்ததாய்-அதுவும் மனித நண்பர்களுடன்-நான் கதையில்கூட - படிக்கவில்லை. ஆகவே கீழே கிடப்பவன்,-அல்ல,-கிடப்பது பேயோ பிசாசோ அல்ல. பின்? அவன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டிருப் பானா? இது பைத்தியக்கார எண்ணம். வெட்டிக்கொள்ளும் போது ஒருத்தன் கூச்சல்கூட போடமாட்டானா? வெள்ளைக்காரனுக்கு ரத்தம் கூட உண்டு; இல்லையா? என்ன் யோசித்தும் எனக்கு சமாதானப்படவில்லை. யோசனையால் அச்சம் மங்கலுற்றுவிட்டது. குனிந்து நன்றாய்ப் பார்த்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/44&oldid=881555" இலிருந்து மீள்விக்கப்பட்டது