உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லை கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பதில் சொல்லிவிடலாம்; அரை உடலுடன் பேசுவது என்றால்... தெரியாமல்...” 'உடம்பு கறுப்பு என்றால் புத்தியுமா கறுப்பு உனக்கு?" x இருமியது மறுபடி மெத்தைமீது விழுந்து இடது கையால் சரிந்திருந்த மார் பின் வலப்பாகத்தைத் தடவிக் கொடுத்தது.அதனுடைய முணுமுணுப்பின் அர்த்தம் நான். நாசமாய்ப் போக வேண்டும் என்பதுதான். நான் ஏன் பேசுகிறேன்? 'ஏய், அந்த பெர்த் மீது, பாட்டிலுக்குப் பக்கத்தில் கிடக்கிறதே சின்ன சீசாவிலிருந்து இரண்டு துளி வாயில் ஊற்று." அப்படியே செய்தேன், உலகத்தை ஆட்டும் மகா சக்தியின் கட்டளைக்குப் பணிவது போல். சிறிதுநேரம் அந்த உருவம் துடிதுடித்தது. கழுத்து அறுபட்டதும்; கோழி துடிக்குமே, அதுபோல. கடவுளே, புனாவைக் கொஞ்சம் முன்னாலாவது அனுப்பக்கூடாதா? என்று என் நெஞ்சு துடிதுடித்தது. கொஞ்ச நேரத்தில் அந்த உருவம் நிதானமுற்றது இடது விழியையும் வலது பள்ளத்தையும் விழித்த அந்த பார்வை? மறுபடியும் அது கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தது. 'நீ எப்போது இங்கே வந்தாய்? அதன் குரலில் அதிகாரமோ ஆத்திரமோ இல்லை; சாதா உணர்ச்சி ஒலித்தது. நான் உண்மையைக் கூறினேன். அப்படியானால் நீ என்னை உடையுடன் பார்த் திருக்கிறாய்! நான் ஒப்புக்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/46&oldid=881558" இலிருந்து மீள்விக்கப்பட்டது