பக்கம்:முல்லை கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 "உட்காரேன்.' என்ற குரலில் சாமானியத்தன்மை மட்டும் அல்ல, ஒருவிதப் பணிவும் இருந்தது. உட்கார்ந் தேன். . 'பிராந்தி கொஞ்சம் சாப்பிடுகிறாயா? எடு..." எடுத்துக்கொடுத்தேன்; நான் சாப்பிடவில்லை. இடது கையில் கிளாஸைப் பிடித்து குடித்துக்கொண்டே அந்த அரை உடல் கேட்டது : "என்னை இப்படிப் பார்க்க உனக்குப் பயமாக இல்லையா ? ' நான் இப்போது பயப்படவில்லை. இந்த உருவம் பேய்பிசாசு அல்ல என்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. சாதாரண மனித ஜன்மம்; ஆனாப்' வெள்ளைப் பிறப்பு. "நீ கொடுத்தாயே, சின்ன சீசாவிலிருந்து மருந்து. அது மார் வலிக்கு-' அதற்கு சிகரெட் பற்றவைத்துக் கொடுத்தேன். இ : எல்லாம் அணிந்திருந்தபோது நான் எப்படி ருந்தேன்?" ? g 'உம்' என்ற முனகலில் பொருள்வைத்துப் பதில் சொன்னேன். இப்போது ?" . பதிலைவேண்டுகிற கேள்வி அல்ல அது; பதில் அந்த உருவிலேயே இருந்தது, இடது கண்ணில் நீர் பிறந்தது: வலது பள்ளத்தின் அடியில் நீர் ஊற்று இருக்கலாம். தென்படவில்லை. அந்த உருவம்-பாவம், மனிதன் என்று சொல்ல முடியாவிட்டாலும், அரைமனிதன் என்பதால் என்ன நஷ்டம் : அரைமனிதன் வருந்தினான். "நான் பிறவிலேயே இப்படி இருந்தேன் என்று நினைக்கிறாயா ?' அவனை அறியவேண்டும் என்று ஆவல் எனக்கும் அதிகமாய் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/47&oldid=881561" இலிருந்து மீள்விக்கப்பட்டது