பக்கம்:முல்லை கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 னர்ரிடம் என் நிலைமையைச்சொல்லி, அவளை மணக்க விரும்புவதையும் ஜாடையாகிச் சொன்னேன், நல்ல மனுஷர், ஒப்புக்கொண்டார். பிறகு அவளிடம் தனிமை யில் என் காதலை விவரித்து விவாகத்தைப் பிரேரேபித் தேன்...அப்போது அவளுடைய முகம் எப்படி சிவந்தது! ரோஜா, ரோஜா!' புனா நெருங்கிக்கொண்டிருந்தது. அரை மனிதனின் காதல் காப்பியத்தைக் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. கதையின் முடிவுக்கு அவனைத் துரத்தி னேன். 'நீ எப்படி இப்படி மாறினாய்?" அரை மனிதன் பரிதாபமாய்ச் சொன்னான்! மேரி என்னை இனி திரும்பியும் பார்க்கமாட்டாள். தான் எந்தப் பெண்ணுடனும் டான்ஸ்கூட செய்யமுடியாது ! ஐயோ, நான் செத்திருக்கக் கூடாதா ?...” 'மனைவியின் காதல் உனக்கு ஆறுதல் அளிக்கும்...' "யார் கண்டார்? அவளுக்கோ இளம்பருவம் நான்... என்னை மனிதன் என்று யாரும்கூற முடியாது...எனக்கு கலியாணமாகி மூன்று வருஷங்கள்தான் ஆகின்றன. என்னால் அவளுக்கு இரண்டுமாதங்கூட சுகம் இல்லை. அந்த பாழும் ஜெர்மன் எருமைகள் எதற்காகவோ சண்டை ஆரம்பித்து விட்டார்கள்; அவர்கள் நாசமாய்ப் போக! எனக்கு யுத்தத்தில் சேருவதற்கு இஷ்டமில்லை; ஆனால் சர்க்காரின் கட்டளையை யாரால் மீறமுடியும்? ஜெர்மானியனோடு சண்டைபோட்டு உயிர் விட்டாலும் கெளரவமுண்டு. இந்த மஞ்சள் பேய்களுடன், குள்ள ஜப்பானியர்களுடன் சண்டைபோட என்னை அனுப்பி விட்டார்கள், அஸ்ஸாமில் ஜாப்கள் குண்டுபோட்டார் கள் அல்லவா? அப்போதுதான் எனக்கு உடம்பெல்லாம் காயம் ஒரு கையும், ஒருகாலும் போச்சு ஒரு கண்ணில் கண்ணடி புகுந்தது; மூக்கு காணாமல் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/49&oldid=881565" இலிருந்து மீள்விக்கப்பட்டது