பக்கம்:முல்லை கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强芯 இதோ இந்த மார்ாைப்பார், ஒருபக்கம் சரிந்துள்ள தல்லவா? அடிக்கடி சகிக்க முடியாதபடி வலி எடுக்கிறது. அதற்கு மருந்து என் மருண்டையைப் பார்...? பார்த்தேன். ஒட்டு போட்டாற்போலத் தோன்றி யது, இரு பினவாக. "என் மூளை கூட சரியாக வேலை செய்வதில்லை அதற்காகவும் அடிக்கடி மருந்து சாப்பிடுகிறேன்... இவ்வளவும் போனபிறகு உயிர்மாத்திரம் ஏன் தப்பியதோ தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் ஒருவருஷம் கிடந்தேன்; என்னைக் கொன்றுவிடும்படி டாக்டர்களைக் கெஞ்சி னேன். என் மூளை மிகவும் உயர்ந்ததாம்; கைகால், எதுபோனாலும் அது நாட்டுக்கு உபயோகப்படுமாம். அதற்காக என் உயிரை உடலுடன் ஒட்டிவைத்துவிட்டார் கள். பாவிகள்! ஆனால் மூளை சரியாக இல்லையே!” அரைமனிதன் புலம்பல் எனக்கு இரக்கம் உண்டாக்கி யது. சிறிது கழித்து கேட்டேன் : "நான் முதலில் பார்க் கும்போது நீ முழுமனிதன்போல இருந்தாயே!” 'அந்த கண் ராவியைப் பார்க்கிறாயா? இதோ, இந்த கோட்டையும் பாண்டையும் எடுத்துப்பார்...' அந்த இரண்டிற்கும் கீழே கட்டையால் செய்யப்பட்ட ஒரு கை, ஒரு கால் பூட்டுடன்!-, ஒரு போலி முக்கு, மூக்குக்கண்ணாடி, சின்ன மருந்து சீசா...இவ்வளவையும் தரித்துக்கொண்டால் அவன் முழு மனிதன்போலக் காட்சி அளிப்பான்! எனக்கு ஒரே திகைப்பு: நீடிக்கவிட அவன் விரும்ப வில்லை. போலும், 'பத்து நிமிஷத்தில் புனா வந்துவிடும். நீ கொஞ்சம் ஜன்னலுக்கு வெளியில் பார்த்துக்கொண்டு இரேன் என் தலையை வெளியே அனுப்பினேன். சுமார் பத்து, நிமிஷங்கள் நான் உள்ளே பார்க்கவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/50&oldid=881569" இலிருந்து மீள்விக்கப்பட்டது