பக்கம்:முல்லை கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 "சரி!' என்றான் அவன். திரும்பினேன். கைகால் மூக்கு எல்லாவற்றையும் கோர்த்துத்தொண்டு, முன் போலவே முழுமையாகத் தோற்றம் அளித்தான் அவன். அந்தப் போலி முக்குதான் எவ்வளவு அழகாய் பொருந்தி யிருந்தது! பொம்மைபோல் அல்ல, பொம்மைதான் பாவம், அவன் உடல் இப்போது கனமாய்த்தான் இருக்கும்! அவனுடைய இடதுகையில் கைத்துப்பாக்கியிருந்தது : அதை என்னிடம் காட்டிக்கூறினான்: 'சகிக்க முடிந்த வரையில் சகித்துப் பார்ப்பேன்; கடைசியில் இத்த கைத் துப்பாக்கி இருக்கவே இருக்கிறது. மாய்த்துக்கொண்டு விடுவேன்!" அவனுடைய பேச்சில் வீரத்தன்மை பீறிட்டது. புனா ஸ்டேஷனில் ரயில் நின்றது. அவன் தொப்பி யைத் தலைமீது வைத்துக்கொண்டான். போலியான வலது கரத்தை கால் சட்டையில் புகுத்தினான். இடது கையில் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு கம்பீர மாக, ஆனால் சற்று சிரமத்துடன் கதவருகில் சென்றான். பக்கத்து வண்டியில் உட்கார்ந்திருந்த நண்பன் கைலாகு கொடுத்து கீழே இறக்க இருவரும் புறப்பட்டனர் என் நண்பனே, நான் வருகிறேன்' என்று என்னி டம் விடை பெற்றுக்கொண்டு டக்டக்' என்று அவன் நடந்ததைப் பார்த்தால், அவன் அரை மனிதன் என்று எவனாலும் கண்டு கொள்ள முடியாது. அவன் நடந்து செல்வதை பிளந்த வாயுடன் பார்த் துக்கொண்டிருந்தேன். வெள்ளைக்காரர்கள் கெட்டிக் காரர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அரைமனிதனை முழு மனிதனாகத் தோன்றச் செய்யும் சாமர்த்தியமும், அறிவும் உனக்கு உண்டா? வ்ெஸ்ளைக்காரன், வெள்ளைக் கார ைதான் . ஆகையால், வெள்ளையரின் ஈடும் இணையும் அற்ற அறிவுக்கு என் வணக்கம் செலுத்துகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/51&oldid=881571" இலிருந்து மீள்விக்கப்பட்டது