பக்கம்:முல்லை கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 கடிதத்தை மூன்றாவது தடவையாகப் படித்தாயிற்று. பிள்ளையார் சுழியிலிருந்து, கீழே "மச்சினன் செண்பக ராம்பிள்ளை கையெழுத்துவரை எழுத்து விடாமல் வாசித்து முடித்தார் காத்த பெருமாள் பிள்ளை. கைகளி ரண்டும் சந்தோஷத்தைத் தொட்டு விட்டதுபோல் பூரித்து நடுங்கின. நெஞ்சில், ஒரு புது வெள்ளம் ஊற் றெடுத்துப் பெருகிற்று. தோளில் கிடந்த சிட்டுத் துண்டு பட்டு அங்கவஸ்திரமாக மாறிவிட்டதுபோல நழுவி நழுவி விழுந்தது. காத்தபெருமாள் பிள்ளை கடிதத்தைக் கையில் பிடித்தபடி, சத்திரத்து ஜன்னல் வழியாக, சாலைக் குமாரசாமி கோயில் வர்ணக் கோபுரத்தைப் பார்த்து மெய் மறந்து நின்றார். காத்த பெருமாள் பிள்ளையின், சம்சாரம் கே மதி அம்மாளுக்கு மாராந்தையில், நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்து தாயும் பிள்ளையும் சுகமாக இருக் கிறார்கள் என்ற நல்ல செய்திதான் சற்று முன் வந்திருந் தது அயர்ந்து துரங்கிக்கொண்டிருந்த ஒருவனைக் குடை ராட்டில் ஏற்றி குலை தெறித்துப் போகும் வேகத்தில் சுழற்றினால், எப்படியிருக்கும்? அதுமாதிரி பிள்ளை வாளுக்கு தலை சுற்றிக் கிறுகிறுத்தது. உலகம், அதன் சூது நிறைந்த சலனம், வாழ்க்கை என்று சோடித்துச் சொல்லு கிற செக்காட்டம் எல்லாம் ஒரு உயிருள்ள காடுபோல் அவரைச் சுற்றி நெருங்க நெருங்கி வந்தன பெண் மக்கள் இருவருக்கும் நகை நட்டுக்கு வழிதேடி சேர்ச் கிற இடத்தில் சேர்த்து கண் குளிரப் பார்த்தாயிற்று ஒரு பொறுப்பு இல்லை, ஒரு கவலை கிடையாது. இருக்கிற காரை வீட்டையும், பாட்டப்பத்து களத்தடிக் காணியை யும் கண் ணுக்குப் பிறகு பெண் மக்களுக்கு என்று எழுதி வைத்துவிட்டு கட்டையைப் போட வேண்டியதுத ன்; காத்த பெருமாள்பிள்ளை பரம்பரை அங்கேயே வாழி பாடி கதையை முடித்துவிடும்' என்றுதான் நேற்றுவரை உறுதியாக நினைத்திருந்தார் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/53&oldid=881575" இலிருந்து மீள்விக்கப்பட்டது